Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 852

$
0
0

852 He bestowed Mukti

In order to understand
I read a lot
In order to understand logic
I argued a lot

As both won
Each other
Finally I
Get confusion

I thought
What is my need?
I straived
To know about it

‘You can receive it
If you search God’ they said
‘How to know that’
I asked

Many shared
Many means
They gave so many scriptures
For me to read

‘Go around
Temples’, they said
They provided so many rituals
For me to do

I did all of them
Diligently
Added to them
I have done some research also

Till the end
I never attained
My need
Through them

When I stood alone
With much depression
Finally God himself came
As my guru

Realizing
What is my need?
He bestowed it
Accordingly

Then he
Taught me
The way
To know him

Then I
Understood philosophy
I bowed at his feet
By giving me to him

Removing the
Pride completely
Keeping the buddhi
Away a bit

When I took
Refuge at his feet
He gave me
Mukti

Mathigiri, 25-3-18, 11.30௦

Another reflection of the way God came as my guru and the way I received mukti through him.

852 முக்தி தந்தான்

தத்துவம் அறிய
படித்துமே பார்த்தேன்
தத்துவம் புரிய
தர்க்கித்துப் பார்த்தேன்

ஒன்றினை ஒன்று
இரண்டுமே விஞ்ச
இறுதியில் நானும்
குழம்பியே நின்றேன்

எனது தேவை
எதுவென எண்ணினேன்
எவ்விதம் அறிவது
என்பதில் முனைந்தேன்

இறைவனைத் தேடினால்
அறியலாம் என்றார்
எவ்விதம் அறிவது
என்றுமே கேட்டேன்

பலரும் பலவித
வழிகளைச் சொன்னார்
படித்துப் பார்க்க
மறைகளைத் தந்தார்

கோயில் குளங்கள்
சுற்று என்றார்
கும்பிட பலவித
சடங்குகள் தந்தார்

அவற்றை நானும்
முனைப்புடன் செய்தேன்
அத்துடன் தெரிந்த
ஆய்வுகள் செய்தேன்

இறுதி வரையில்
எனது தேவை
இவைகள் மூலம்
அடையவே இல்லை

இதயம் சோர்ந்து
தனிமையில் நிற்க
இறுதியில் இறைவனே
குருவாய் வந்தான்

எனது தேவை
எதுவென அறிந்து
எனக்கு ஏற்ப
அதனைத் தந்தான்

அதன்பின் அவனை
அறிந்திடும் வழியை
அவனே எனக்கு
சொல்லித் தந்தான்

அதன்பின் அறிந்தேன்
தத்துவம் தன்னை
அவனடி பணிந்தேன்
தந்தே என்னை

ஆணவம் தன்னை
அறவே நீக்கி
அறிவைக் கூட
சற்றே ஒதுக்கி

சரணடைந்து நான்
தாளினைப் பற்ற
தந்தான் அவனே
முக்தி தன்னை

மத்திகிரி, 25-3-18, இரவு 11.30௦


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles