Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 854

$
0
0

854 This is enough

If I live like this
That is enough for me
I only need a heart
Which always can think you?
Though the life on earth
Moves in a routine way
I only need the blessing
Of worshiping your feet

There is nothing greater
Than you for me
I don’t have the capacity
To sing your praises
But you came to show mercy
To the simple one
I need a heart only
To celebrate it

Many trails are there
For me on this earth
I have a heart
Which get tossed by various thoughts?
When I get drowned
Dragged by them
The grace which saves me
Not get perished is enough

Like this thinking
In every day
Joining with you
Celebrating you
Somehow completing
My race in you
If I live with you
That is enough for me

Mathigiri, 30-3-2018, 10.35 p.m.

Another song thanking god for the life which he gave to live each day with satisfaction.

854 இதுபோதும்

இதுபோல வாழ்ந்தாலே
அதுஒன்று போதும்
எந்நேரம் உனைஎன்னும்
மனமொன்றே வேண்டும்
தன்போல புவிவாழ்வு
நகர்கின்ற போதும்
தாளினைப் பணிகின்ற
பேறுஒன்றே வேண்டும்

உன்னிலும் உயர்வாக
ஒன்று எனக்கில்லை
உன்புகழ் தனைப்பாடும்
திறனும் எனக்கில்லை
ஆயினும் எளியோர்க்கு
இறங்கிட வந்தாயே
அதைமட்டும் கொண்டாடும்
மனமொன்றே வேண்டும்

பலவித பாடுகள்
பாரினில் எனக்குண்டு
பலவித எண்ணத்தால்
அலைபாயும் மனமுண்டு
அவற்றாலே இழுப்புண்டு
மூழ்கிடும் போதும்
அழியாமல் எனக்காகும்
அருளொன்றே போதும்

இதுபோல உனையெண்ணி
ஒவ்வொரு நாளையும்
உன்னுடன் நான்சேர்ந்து
கொண்டாடி வாழ்ந்து
ஒருவாறு ஒட்டத்தை
உன்னிலே முடித்து
உன்னோடு வாழ்ந்தாலே
அதுஒன்றே போதும்

மத்திகிரி, 30-3-2018, இரவு 10.35


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles