861 I need your abode
I try to think
But it is not clear to me
Though I try to write down
My mind cannot understand it
Finally when I come
Bowing to your feet
I understood your love
I am denying it
What I understood is little
When others shared about it
Even after reading your Veda
What I understood also was little
Only after you taught
By your Spirit
I understood
This alone is true
Though I researched
To know through my intellect
Though I read
So many books
Until you tell
By taking mercy on me
My heart won’t understood
Finally I understood this
You alone came
To redeem me
You gave boons
On your own
When I get disappointed
By my own efforts
You came voluntarily
To uphold me
Thinking this
I reached your feet
I begged you to
Uphold me like this
I should complete my earthly life
Living like this
I should reach your
Unparallel abode
Mathigiri, 11.4.18, 2.30௦௦ p.m.
I wrote this song after reading few more pages in commentaries and others books. They all required for us to have a systematic understanding of Muktiveda. But when so many (contradicting) views are presented before us, the final resort is only the Spirit of the Lord Who alone can teach us about the love of God. Though mysticism always remains a mystery, still it has a vital part in our bhakti life.
861 பதம் வேண்டும்
எண்ணியே பார்க்கிறேன்
எனக்கது புரியவில்லை
எழுதியே பார்த்தாலும்
கருத்துக்கும் விளங்கவில்லை
இறுதியில் உன்பாதம்
பணிந்துமே வரும்போது
உணர்ந்தேன் உன்னன்பை
இதனை மறுக்கவில்லை
பிறர்வந்து சொன்னபோது
புரிந்தது கொஞ்சமேதான்
உன்வேதம் படித்தபின்னும்
அறிந்ததும் கொஞ்சமேதான்
உன்னாவி நீதந்து
உரைத்த பின்னரேதான்
உணரத் தொடங்கினேன்
உண்மையில் உன்னையும்தான்
அறிவாலே அறிந்திட
ஆராய்ந்தும் பார்த்தாலும்
அளவற்ற நூல்களைப்
படித்திட முனைந்தாலும்
இறுதியில் இரங்கிநீ
உரைக்கின்ற வரையினில்
என்னுளம் அறியாது
உணர்ந்தேன் இதையும்தான்
நீயாக வந்துதானே
என்னையும் மீட்டாய்
நீயாக விரும்பிதானே
வரங்களைத் தந்தாய்
நானாக முனைந்து
ஏமாறும் போதெல்லாம்
தானாகத் தேடிவந்து
தாங்கியே நீயும்நின்றாய்
இதைஎன்னி இறுதியில்
உன்பதம் விரைந்துவந்தேன்
இதுபோல் எனைத்தாங்க
இறைஞ்சியே நானும்நின்றேன்
இவ்விதம் நான்வாழ்ந்து
இகவாழ்வை முடிக்கவேண்டும்
இணையில்லா உன்பதம்
உறுதியாய் அடையவேண்டும்
மத்திகிரி, 11.4.18, மதியம் 2.30௦௦