863 Opportunity to repentance
Though they go away
One day they will come back
Realizing you
They will worship your feet again
Lamenting after
Realizing what they have done unknowingly
O Holy One
They will take refuge at your feet
There is no human
Who won’t repent?
If one does not repent
Then he cannot be human
Once if we miss the opportunity
Which you give to repent
There is no chance
To repent again
I tell this
One who have repented
I told the simple
Means for repentance
If they come back
After repentance
I will worship
Your feet along with them
Mathigiri, 13-4-18, 1.15 p.m.
For me repentance is not merely an opportunity given by God but it is also a virtue only we human can have. As I was reflecting the greatness of repentance I wrote this song. Sometimes I feel that the greatness of the Lord can be understood when we get lost and regain him after repentance. In that sense repentance becomes even a virtue.
863 திருந்தும் வாய்ப்பு
ஒதுங்கியே போனாலும்
ஒருநாள் வருவார்
உணர்ந்தே மீண்டும்
திருவடி பணிவார்
புரியாமல் செய்ததை
எண்ணியே புலம்பி
புனிதனே உன்னடி
தஞ்சம் புகுவார்
திருந்தாத மனிதர்
எவருமே இல்லை
திருந்தாமல் போனால்
மனிதரே இல்லை
திருந்திட நீதரும்
வாய்ப்பினைத் துறந்தால்
திருந்திட மீண்டும்
வாய்ப்புமே இல்லை
திருந்திய நானும்
உணர்ந்தே சொன்னேன்
திருந்தும் எளிய
வழியினைச் சொன்னேன்
திருந்தி வந்தால்
அவருடன் இணைந்து
மீண்டும் உந்தன்
தாளினைப் பணிவேன்
மத்திகிரி, 13-4-18, மதியம், 1.15