501 இருவரும் தோற்றோம்
என்மனம் ஆயிரம்
கேள்விகள் கேட்குது
எவ்வித பதிலை
நானுமே தருவது
எத்தனைக் காலம்
இதுபோல வாழ்வது
என்றுமே என்னிடம்
மல்லுக்கு நிற்குது
இரவு பகலாய்
உனக்காக உழைத்து
ஒட்டாய்த் தேய்ந்தேன்
என்றுமே சொல்லுது
எப்போது எனக்கு
ஓய்வுமே கிடைக்கும்
என்றுமே என்னிடம்
நியாயமும் கேட்குது
என்னவோ இதுவரை
என்சொல் கேட்டுமே
எல்லாம் செய்த்தாய்
வம்புக்கு இழுக்குது
என்நிலை அறிந்துமே
ஏனிதைச் செய்யுது
என்பது மட்டுமே
விளங்கிட மறுக்குது
என்மனம் என்னிடம்
ஒய்வுமே கேட்க
அதனிடமிருந்து நான்
தப்பிக்கப் பார்க்க
ஒருவரை ஒருவர்
குறைசொல்லி நிற்க
இருவரும் தோற்றோம்
வேறென்ன சொல்ல
மத்திகிரி, 1-2-19, காலை, 9.30