888 I am not responsible
If you teach me
I will do accordingly
If you refuse to do that
What can I do for that?
For this little boy
Who does not have his own mind?
Who else is there?
To teach me other than you
Remember all that
You have taught so far
If I do mistake
Just only ask about it
When I walk
After knowing your heart
If you refuse to help me
There is no other means for me
Then don’t
Blame me for that
Don’t find any
Fault in me
What else work?
Do you have other than this?
It is not good for you to remain
Irresponsible for this
Should I need to?
Tell even this to you
I don’t have time
For that, don’t you know?
As I am only doing
Your work without rest
I am not responsible
For your mistake
Everyone should do
Their own work
If one fails in it
Then she should give account to it
Keeping only this
In your mind
Not further delaying
Come to teach me
Mathigiri, 4-6-2018, 11.00 p.m.
Another fight with the Lord as he refuse to me teaching when I desperately need it. Sometimes I feel that he deliberately leave me to struggle alone. But I won’t let him go that much easily and will demand his help and co-operation all the time.
888 நான் பொறுப்பில்லை
சொல்லிநீ தந்தால்
சொன்னபடி செய்வேன்
சொல்லித்தர மறுத்தால்
நானென்ன செய்வேன்
சொந்தபுத்தி இல்லா
சிறுபிள்ளை எனக்கு
சொல்லித்தர யாருண்டு
உன்னைவிட்டால் அதற்கு
இதுவரை செய்ததை
எண்ணியே பாரு
ஏதேனும் தவறினால்
அதைமட்டும் கேளு
உன்னுள்ளம் அறிந்து
நடந்திடும் போது
உதவிட மறுத்தால்
வழியில்லை எனக்கு
அதன்பின் குறையேதும்
என்மீது கூறாதே
அநியாயமாய் நீயும்
வீண்பழி போடாதே
இதைவிட உனக்கு
வேறென்ன வேலை
பொறுப்பற்று இருப்பது
கொஞ்சமும் சரியில்லை
இதையும் உனக்கு
நான்சொல்லித் தரணுமா
அதற்குமே நேரம்
எனக்கில்லைத் தெரியுமா
ஒய்வு ஒழிவின்றி
உன்வேலை செய்வதால்
உனது தவறுக்கு
நானுமே பொறுப்பில்லை
அவரவர் கடமையை
அவரவர் செய்யணும்
அதிலே தவறினால்
கணக்குமே காட்டணும்
இதைமட்டும் நீயும்
மனதிலே கொண்டு
தாமதம் இன்றி
சொல்லித்தர வந்திடு
மத்திகிரி, 4-6-2018, இரவு11.00