897 In order to accomplish your will
My heart melts
When you overlord me
When you come and talk to me
My mind is filled
When I get seeking on my own
Several questions come
I am confused whether
It is good or bad
Knowing my nature
You do properly
Knowing my need
You do only good to me
In order to accomplish
The will which you have for me
You lead me
Even overcoming me
When I obey accepting it
And come to you
You do your work
Through me
By disobedience
When I go on my own way
You keep only defeat
For me at the end
Though I realized
This so many times
As again I
Trespassed one more time
Out of compassion
You overlord me
By talking gently
You change my mind
Accepting it
Oh my Lord I come again to you
I bow at your feet
As you over lording me
Mathigiri, 8-6-2018, 11.35 p.m.
When I seek my own means for some issues, trespassing god’s will and plan for me, I fail. But not giving up, again god, out of compassion interferes and teaches me one more time. As I experienced this again I wrote this song.
897 சித்தத்தை நிறைவேற்ற
நீவந்து எனையாள
நெஞ்சமும் நெகிழுது
நீவந்து உடன்பேச
சிந்தையும் நிறையுது
நான்தேடி பெறும்போது
கேள்விகள் தோன்றுது
நல்லதா தீயதா
என்றுமே குழம்புது
என்குணம் அறிந்தநீ
ஏற்றதைச் சொல்கிறாய்
என்தேவை உணர்ந்துமே
நல்லதைச் செய்கிறாய்
எனக்காக நீவைத்த
சித்தத்தை நிறைவேற்ற
என்னையும் மீறியே
என்னையே நடத்துராய்
இதையேற்று நானுமே
இணங்கியே வரும்போது
என்மூலம் நீயுமே
உன்பணி செய்கிறாய்
இதைமீறி நானுமே
என்வழி சென்றிட
இறுதியில் தோல்வியை
எனக்காக வைக்கிறாய்
பலமுறை நானுமே
இதையுமே உணரினும்
மீண்டும் ஒருமுறை
மீறியே சென்றிட
இரக்கத்தால் நீயுமே
என்னையும் ஆள்கிறாய்
இதமாகப் பேசியே
என்சிந்தை மாற்றுராய்
அதைநானும் ஏற்று
ஐயனே வருகிறேன்
ஆட்கொண்ட உன்னடி
மீண்டுமே பணிகிறேன்
மத்திகிரி, 8-6-2018, இரவு, 11.35