Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 899

$
0
0

899 You evaluation is not correct
(Need re-evaluation)

If I made a calculation
You change and do another one
When I ask the reason for that
You say that my calculation is not correct

Do you have a separate ‘table’ to calculate
Which is correct for you is that alone is correct for all
‘Your ways is not my way’, as you said this
Is that alone your calculation?

Do you think that
As you are god who can question you
But when I tell about my right which you gave to me
Then why you become upset with me unnecessarily?

If you keep a common theory for all
Is it right for anyone to breach it
Is it correct to bring some change in it
And impose it on me?

Before you make any change you should ask me
You should prepare my heart for that
Whatever you might have done before creating me
After creating me you should also listen to the words of your bhakta

You have no means to change this right
Which you alone gave to me, do you know this
When I do my calculation accordingly
You should give mark as per it

Mathigiri, 10-6-2018, 2.00௦ p.m.

I find it difficult to translate this song in English. Though God has every right to do whatever he wants before creation, once he created us (me) he should consult before changing even any common theory. But not preparing me properly he changes it and evaluate my work according to the new changes. He has every right to do it, but he also should have prepared my mind for that. This is the right which a bhakta has with the Lord as he alone gave it to her.

899 மதிப்பெண் சரியில்லை
(மறு கூட்டல் வேண்டும்)

கணக்கு ஒன்றை நானுமே போட்டால்
மாற்றியே போடுறாய் நீயுமே அதனையும்
காரணம் என்னவென நானுமே கேட்டால்
என்கணக்கே சரியில்லை என்கிறாய் மீண்டும்

உனக்கெந்த தனியே இலக்கணம் (வாய்ப்பாடு) இருக்கா
உனக்கெது சரியோ அதுதான் கணக்கா
“உன்வழி என்வழி இல்லை” என்றால்
அதுதான் எனக்கு நீவைத்த கணக்கா

இறைவன் ஆனதால் யாருனைக் கேட்பார்
என்கின்ற எண்ணம் உனக்குமே இருக்கா
ஆயினும் நீதந்த உரிமையைச் சொன்னால்
அதன்பின் என்னிடம் வீணான பிணக்கா

நியதி ஒன்றைப் பொதுவாக வைத்தால்
அதன்பின் அதனை மீறுதல் முறையா
அதிலே மாற்றம் கொண்டுமே வந்து
அதனை என்மேல் திணிப்பதும் சரியா

மாற்றும் முன்னே என்னிடம் கேட்கணும்
மனதை அதற்குநீ ஆயத்தப் படுத்தணும்
படைக்கும்முன் எதனை நீசெய்தபோதிணும்
படைத்தபின் பக்தனின் பேச்சையும் கேட்கணும்

நீதந்த உரிமை இதனை மாற்றும்
வழியில்லை என்பதும் உனக்குமே தெரியும்
அதன்படி கணக்கை நானுமே போட
அதைமட்டும் பார்த்து மதிப்பெண் போடணும்

மத்திகிரி, ௧10-6-2018, மதியம் 2.00௦


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles