906 Longing of the heart
My heart is longing for you
It is waiting for your arrival
It thinks about the fellowship that it had with you
It comes longing to have the same again
It is a kind of experience and there is no language to share about it
There is no time for that kind of fellowship
Though that fellowship remains only for few seconds
There is no limit for the joy that it gives
Heart will give itself forgetting it
It will forget even seeking something for its need
When it has fellowship with you
What else it will seek more than you
Forgetting the sense of living in the body
Renouncing the world along with it
Attaining a noble blissful status
It will long to remain to be there always
Still as it return back to the world
The joy that it gains will roar like waves
As that vibration continuous
Long to have it again it seeks your feet
When I try to put it in words
My own heart will mock at me
The one which neither the body or the sense experienced
It will prevent me not to write about it
When the heart refuses there is no alternative for me
I cannot deny the truth which the heart has shared
When I go along with it and accept its words
There is no thought writing further about it
Mathigiri, 18-6-2018, 11.30 p.m.
I am not sure whether all the experience that I have when I sit with the Lord is real or not. That experience remains sometimes very few seconds and other times, its effects remain for a long time—even when I do other works. At the same time my rationality refuse to accept it as real mystic experience and easily assigns to my emotion. However one is for sure. When I have such experience I don’t want to come out of it and like it have for a long time. After coming out from such experience, I find it difficult to accept it as real and also know that I don’t have words to express it. When I attempt to express it through any means my own spirit will mock at me. So when again I wrote this song at the end I closed it with the same thought that there is no point to express such experiences.
906 மனதின் தவிப்பு
என்மனம் உனையெண்ணி ஏங்கியே தவிக்குது
வரும்நேரம் எதிர்பார்த்து காத்துமே கிடக்குது
உன்னோடு உறவாடி இருந்ததை எண்ணுது
மீண்டும் பெறவேண்டி ஆர்வமாய் வருகுது
அதுஒரு அனுபவம் அதைச்சொல்ல மொழியில்லை
அந்த உறவுக்கு காலமோர் தடையில்லை
சிலநொடி நேரமே உறவாடும் போதும்
அதுதரும் பரவசம் அதற்கில்லை எல்லை
தன்நிலை மறந்து தன்னையே தந்திடும்
தனக்கென ஒன்றைக் கேட்டகவும் மறந்திடும்
உன்னுடன் கலந்து உறவாடும் போது
உன்னிலும் மேலாக வேறெதை நாடும்
உடலில் வாழ்ந்திடும் உணர்வையும் இழந்து
உலகை அத்தடன் உள்ளாகத் துறந்து
மேலான பரவச நிலையையும் அடைந்து
மீளாமல் அங்கேயே இருந்திட விழையும்
ஆயினும் மீண்டு உலகினில் திரும்ப
அதுதந்த ஆனந்தம் அலையென மோதும்
அந்தபேரின்ப அதிர்வுகள் தொடர
அதைநாடி மீண்டும் உன்னடி தேடும்
இதையே எழுத்திலே வடித்திட முயல
என்மனம் என்னையே ஏளனம் செய்யும்
உடலொடு உணர்ச்சியும் உணராத ஒன்றை
எழுதியே காட்டிட தடையுமே போடும்
மனமொன்று மறுத்திட மாற்று எனக்கில்லை
மனம்சொன்ன உண்மையை மறுப்பதற்கில்லை
அதன்வழி சென்று அதன்சொல்லை ஏற்றபின்
இதற்குமேல் எழுதிட எண்ணமும் இல்லை
மத்திகிரி, 18-6-2018, இரவு, 11.30