928 Communicating silently
When I communicate with you in silence
There comes bliss in my heart
Controlling my mind when I close my eyes
The blissful visions are appearing before me
All my thought will be only on you
Heart also will attain bliss with fullness
Mind also will stand still there
My thought will take refuge in you
Once I stayed there with you
Peace will occupy my mind
Renouncing it and coming back
Is not that much easy, what can I say further?
Once I see the comfort in it
Through the heart which is comforted
The body also will feel some kind of rest
Once you give it, the tiredness also will disappear
In this human life full of frustration
Where is the permanent rest for the mind?
Reducing the talk and when I come to your presence
It will find the fullness in you which it seeks
Seeking it this slave has come to you
I stood silently before you
I give up prayers and confessions completely
Tears overflowing my eyes I bowed at your feet
Mathigiri, 21-07-2018, 11.30௦ p.m.
My computer opens always very slowly. Though Anugrah installed so many speeds up programs, still it opens very slowly. As Vijay is using my computer, he will always complain about it. But I find it a blessing and not a problem. When I open my computer, I know it will take some time to open; I will relax a bit leaning back on my chair by closing my eyes. Because though I am not believe in formal bodily observances need for sadhana, still I find that when I close my eyes, even for few seconds, then I enter in a different kind of world where I can only be with the Lord. Of course this often does not happen, but when I sit for my meditation and close my eyes, I feel both my mind and heart (of course both are the same) find some rest and my body also feels some kind of rest.
928 மவுனமாயப் பேசி
மவுனமாய் உன்னுடன் பேசிடும் போது
மனதுக்குள் ஒருவித பரவசம் தோன்றுது
கண்களை மூடி சிந்தையை ஒடுக்க
ஆனந்தக் காட்சிகள் கண்முன் விரியுது
எண்ணங்கள் முழுதும் உன்னையே எண்ணும்
இதயமும் நிறைந்து பரவசம் அடையும்
நின்றுதான் போகும் அங்குதான் நெஞ்சம்
நினைவுமே அடையும் உன்னிடம் தஞ்சம்
அங்குமே உன்னுடன் தங்கிய பின்னே
அமைதியும் ஆட்கொள்ளும் மனதில் முன்னே
அதனைத் துறந்து மீண்டுமே வருவது
அத்தனை எளிதல்ல வேறென்ன சொல்வது
தேடிய ஆறுதல் கண்டபின்னாலே
தேறுதல் அடைந்த உள்ளத்தின் ஊடே
மேனியும் உணரும் ஒருவித ஓய்வு
நீயதைத் தந்திட போயிடும் அயர்வு
சஞ்சலம் நிறைந்த மானிட வாழ்வில்
சிந்தைக்கு ஏது நிரந்தர ஓய்வு
சொல்லினைக் குறைத்து சன்னிதி வந்தால்
உன்னிடம் கிடைக்கும் தேடிடும் நிறைவு
அதைப் பெறவேண்டி அடியனும் வந்தேன்
அமைதியாய் உன்முன் மவுனமாய் நின்றேன்
வேண்டுதல்-விண்ணப்பம் அனைத்தும் துறந்தேன்
விழிகளும் வழிய திருவடி பணிந்தேன்
மத்திகிரி, 21-07-2018, இரவு 11.30௦