936 Thinking about my old age
Whatever I say
You should listen
Whatever I do
You should accept
Because you
Know my situation
You know
Which one is good for me?
Of course
Few times I opposed you
I questioned you
As I get irritated
You know the
Reason for that
Why again
You bring it back?
In general
I listened to you with much patience
If I cannot understand
I asked the explanation for it
Whatever you have done for me
I obeyed
When I am unable to do
I sought your help
Therefore I saw
Only blessing in it
I realized your
Immense grace
Though you gave
Some trials and troubles
Even I experienced
Your love in them
As I realized
This secret
I will do only this
Hear after also
But now
I become old
So you should deal with me
Accordingly
Whatever you say
Tell it clearly
Before you do anything
Just consult me a bit
Knowing my condition
You do accordingly
Because now it is old age
Just remember that
Mathigiri, 7-8-2018, 11.30 p.m.
I like to tease the Lord often. This is one such occasion. I often tell him that he won’t understand the plight of old people as he never had that experience in his life. Now my demand from his is that hear after he should listen to me and consult me a bit before he do anything in my life. When Vijay kumar points out some inconsistencies in my demands, I used to tease him by saying, ‘we have every right to demand and do mistake and even get irritated. Because we become old. Even constitution provides this right for us as senior citizen (which is not true). But as a young man you should listen and only obey and not to counter argue with me’. The same I tell to the Lord also often.
936 முதுமையை நினைத்துகொள்
எதை சொன்னாலும்
கேட்கத்தான் வேண்டும்
எதை செய்தாலும்
ஏற்கத்தான் வேண்டும்
ஏனென்றால் உனக்கு
என்நிலைப் புரியும்
எனக்கெது நன்மை
என்பதும் தெரியும்
ஏதோ சிலமுறை
எதிர்த்துமே பேசினேன்
எரிச்சல் கொண்டு
கேள்விகள் கேட்டேன்
அதற்கான காரணம்
உனக்குமேத் தெரியும்
அப்புறம் அதையேன்
மீண்டுமே கிளறனும்
பொதுவாக நானும்
பொறுமையாய்க் கேட்டேன்
புரியாது போனால்
விளக்கமும் கேட்டேன்
நீஎதைச் செய்யினும்
பணிந்துமே போனேன்
முடியாத போது
உதவியும் கேட்டேன்
அதனாலே இதுவரை
நன்மையைப் பார்த்தேன்
அளவிலா உனது
கிருபையை அறிந்தேன்
சிலபல துன்பங்கள்
நீதந்த போதும்
அதிலும் உனது
அன்பையே உணர்ந்தேன்
இந்த இரகசியம்
புரிந்த பின்னாலே
இதையே செய்வேன்
நான் இனிமேலே
ஆயினும் இப்போ
வயசாகிப் போச்சு
அதற்கு ஏற்ப
இருக்கணும் பேச்சு
சொல்லவதை இனிமேலே
தெளிவாகச் சொல்லு
செய்திடும் முன்னே
ஒருவார்த்தை கேளு
என்நிலை உணர்ந்து
அதன்படி செய்திடு
ஏனென்றால் முதுமை
அதையும் நினைந்திடு
மத்திகிரி, 7-8-2018, இரவு, 11.30