Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 946

$
0
0

946 I ignore others

I easily ignore
Others
Then become
Upset with me 1

I decided to
Keep them away
But I remain away
And cheat me 2

I tell immediate
That it is
Not possible
Anymore 3

However others
Try to talk
I refuse
To listen them 4

However thinking
What has happened?
I lost my peace
As I become upset 5

I allow
Negative thoughts
To grow in me and
Allow to over lord 6

Imagining several
Things unnecessarily
And growing
Anger within me 7

Pouring more
Oil in the fire
And increasing
The fire more and more 8

Finally allowing
It to annihilating me
I am
Finished at the end 9

{Knowing this
My condition
Taking pity
In order to redeem me 10

You redeemed me
Because of your grace
Reviving me again to live
Who is dead} 11

But there is
No final victory
So far
On this nature 12

Till the end
I have live with this nature
There is no
Alternative to this 13

Mathigiri, 21-8-2018, 11.55 p.m.

A self portrayal. First I wrote this a secular song. After writing it, as I began to meditate about this song, I began to pray to God to help me to overcome this nature in me. Then I wrote stanza 10 and 11 as my prayers and read the poem as my prayer. After prayer then I thought about it and wrote another two stanzas (12 and 13) and bracketed 10 and 11. So I can easily switch between two worlds. However I finally decided to keep it under bhakti theology song and kept stanzas 10 and 11.

946 அலட்சியம் செய்கிறேன்

அலட்சியம் செய்கிறேன்
பிறரை எளிதில்
ஆத்திரம் கொள்கிறேன்
உடனே மனதில் 1

ஒதுக்கி வைத்திட
உள்ளத்தில் நினைக்கிறேன்
ஒதுங்கி நின்று
என்னையே ஏய்க்கிறேன் 2

ஒத்து வராது
இனிமேல் என்று
உடனே நானும்
சொல்லி விடுகிறேன் 3

எப்படி எடுத்து
பிறர் சொன்னாலும்
கேட்டிட மட்டும்
நானுமே மறுக்கிறேன் 4

ஆயினும் மனதில்
நடந்ததை எண்ணி
ஆத்திரம் கொண்டு
அமைதியை இழக்கிறேன் 5

எதிர்மறை எண்ணம்
என்னிலே வளர்ந்து
என்னையே ஆள
இடமுமே தருகிறேன் 6

வீணாய்க் கற்பனை
பலவும் செய்து
கோபம் கொண்டு
அதனை வளர்த்து 7

எரியும் தீயில்
எண்ணை ஊற்றி
மேலும் மேலும்
நெருப்பை வளர்த்து 8

இறுதியில் அதுவும்
என்னை அழிக்க
இடமும் தந்து
முடிந்துமே போகிறேன் 9

{இந்த எனது
நிலையை அறிந்து
என்னை மீட்க
இரக்கம் கொண்டு 10

முடிந்த என்னை
மீண்டும் உயிர்த்து
உனது அருளால்
மீட்டுக் கொண்டாய்} 11

ஆயினும் இந்த
குணத்தின் மீது
இறுதி வெற்றி
இன்னும் இல்லை 12

இறுதி வரையில்
இதனுடனே
வாழ வேண்டும்
வழியும் இல்லை 13

மத்திகிரி, 21-8-2018, இரவு, 11.55


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles