Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 980

$
0
0

980 Awakened

I know that
You will come seeking me
You will give by seeking me
I experienced that
There is no other means
For me to know you
There is no use
By attempting any other thing

When the inner need
Compels me
When the atman also
Longs for you
You will come on your own
Seeking me
You will win me
By showing your love

All the paths
That scriptures prescribe
Are the paths
That human searched
None has attained
By going through that paths
If we trust them
There is no hope for redemption

When we proclaim that
It is no more possible
Seeking your grace
By folding both the hands
When we come
Seeking your grace
You too will provide
By reaching us

Forgetting this
Simple means
Searching everywhere
By wandering
Doing so many research
By reading so many book
How many millions
get lost

Though I too have
Done the same
As I awakened
In the middle
I understood you
Who came seeking me
I reached your feet
Knowing that your are god

This alone I
Proclaim to the world
I beg them to be
Awakened like me
Those who listen
Surely will be awakened
They will receive
What they ask for

Mathigiri, 29-09-2018, 11.50 p.m.

After my reading and some reflections about dialogue and evangelism, in my prayer I said, ‘you will come seeking after us and there is no other means to understand you’. Then unable to pray further, I began to reflect about it. As the inspiration came I wrote this song as my prayer for this day.

980 விழித்துக் கொண்டேன்

நாடிநீ வருவாய்
நானதை அறிவேன்
தேடிநீ தருவாய்
நானதை உணர்ந்தேன்
வேறு வழியில்லை
உன்னையும் அறிய
வேறெது செய்யினும்
பயனில்லை அடைய

உள்ளாகத்@ தேவை
உந்திடும் போது
உயிருன்னைத் தேடி
ஏங்கிடும் போது
நீயாக நாடி
வந்திடுவாயே
நேசத்தைக் காட்டி
வென்றிடுவாயே

மறைகள் கூறிடும்
வழிகள் யாவும்
மானுடர் தேடிய
பாதையே ஆகும்
அதன்வழிச் சென்று
அடைந்தவர் இல்லை
அதையே நம்பினால்
மீட்புமே இல்லை

இனி ஆகாது
என்றுமே கூறி
இருகரம் கூப்பி
உன்னருள் தேடி
வந்திடும் போது
நீயுமே@த் தேடி
தந்திடுவாயே
எம்மையும் நாடி

இந்த எளிய
வழியினை மறந்து
எங்கெங்கோத் தேடி
அலைந்துமே திரிந்து
நூல்பல படித்து
ஆய்வுமே செய்து
தன்னை இழந்தவர்
எத்தனைக் கோடி

நானும் அதையே
செய்திருந்தாலும்
நடுவே நானும்
விழித்ததினாலே
தேடி வந்த
உன்னையும் அறிந்தேன்
தெய்வம் நீயென
உன்னடி அடைந்தேன்

இதையே இன்று
ஊருக்குச் சொன்னேன்
என்போல் விழித்திட
இறைஞ்சியே நின்றேன்
கேட்போர் நிச்சயம்
விழித்திடுவாரே
கேட்டதை நிச்சயம்
பெற்றிடுவாரே

மத்திகிரி, 29-09-2018, இரவு, 11.50


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles