997 Why should I think?
You have a heart
Which does not know limitation?
You are the one who
Forgot to see our shortcomings
Though I live
With many shortcomings
You are the one who sees
Shortcomings as good nature
As we live
Only to see (other’s)
Shortcomings and limitations
Alone
It is possible
Only to you
To forgive
And accept humans
But my heart is
Wondering
To see the
Reason for this
As you have
Created me in your image
You kept your trust
In me
But Oh my Lord
As I am not qualified for that
And as I began to
Deny you
Like a mother
Who does not think the qualification of the child?
You too come seeking me
In order to redeem me again
As my heart
Melts in that love
I too understood
Your grace
Therefore
Whichever might be my shortcomings?
I don’t hesitate
To come unto you
Once you hugged me
As a mother
Why should I think?
About my shortcomings?
Mathigiri, 23-10-2018, 10.10 p.m.
As I began my night walk, as I thought about the Lord, the thing that came to my mind about him is that he never has a mind which never thinks only about my shortcomings. In deed he considers even my shortcomings as my qualification for him to seek and save me. As I further reflected about it, I wrote this poem. Of course after writing one stanza, I continued my walking and further reflected about it and wrote the next and before completing the walking I completed this poem also.
I read in one of Tamil poem which says about God that ‘he treats our shortcomings as our qualification’. I have to find the exact line and reference.
997 எதற்காக எண்ணனும்
குறைவில்லா மனது
கொண்டவன் நீயே
குற்றமும் காண
மறந்தவன் தானே
குறையுடன் நானுமே
வாழ்ந்திடும் போதிலும்
குறைகளை குணமாகக்
காண்பவன் தானே
குற்றம் குறைகளை
மட்டுமே எண்ணும்
குணமது மட்டுமே
கொண்டுமே வாழும்
மனிதனின் மனதினை
நீயுமே அறிந்தும்
மன்னித்து ஏற்றிட
உனக்குத்தான் முடியும்
ஆயினும் இதற்கு
நீகொண்ட காரணம்
அதையுமே எண்ணிட
வியக்குது என்மனம்
உன்சாயல் கொண்டு
படைத்த பின்னாலே
நீயுமே வைத்தாய்
நம்பிக்கை என்மேலே
ஆயினும் அதற்கான
தகுதியும் இல்லாமல்
ஐயனே உன்னையும்
மறுக்கின்ற போதிலே
சேயின் தகுதியை
என்னாத தாய்போல
தேடியே வருகிறாய்
என்னையும் மீட்கவே
அந்த அன்பிலே
என்மனம் கரையவே
அறிந்தேன் உனது
அருளினை நானுமே
எனவே என்குறை
எ@துவான போதும்
உன்னிடம் வந்திட
இல்லையே தயக்கம்
அன்னையாய் என்னைநீ
அணைத்திட்ட பின்னே
எதற்காக நானினி
என்குறை எண்ணனும்
மத்திகிரி, 23-10-2018, இரவு, 10.10