1074 இன்னிசை
பாடிடும் போது
பரவசம் தோன்றும்
பதமலர்த் தேடி
இதயமும் ஓடும்
நானுனைப் பாட
இன்னிசைப் பிறக்கும்
நினைவுமே துதியில்
நனைந்து கிடக்கும்
என்னுள்ளே ஆர்வம்
பொங்கித் ததும்ப
என்மனம் உன்னையே
நாடி விரும்ப
இதுபோல் என்றும்
வாழ விரும்ப
ஏங்கியே வந்தேன்
கண்கள் ததும்ப
என்னவோ இந்தப்
பிறவியும் தந்தாய்
என்மனம் கோயிலாய்
நீயுமே கொண்டாய்
அனுதினம் உன்னை
வழிபட வென்று
ஐயனே இந்த
வரமுமே தந்தாய்
இதையே எண்ணி
இதயமும் நெகிழ
எனது அன்பில்
நீயும் மகிழ
உனக்கென வாழும்
பேற்றை அருள
எடுத்தேன் பிறவி
உன்னைப் புகழ
அதனால் உனது
துதிகள் பாடி
அனுதினம் புதுப்புது
பாக்கள் சூடி
உனது அருளை
மனதில் எண்ணி
இதுபோல் வாழ்வேன்
இன்னிசைப் பாடி
மத்திகிரி, 5-3-2019, இரவு, 10.50