Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1016

$
0
0

1016 Should give answer

God also should give
Account to us
He knows the
Reason for that

There is no chance for him to keep away
Once he has created us
There is no hope for him to say to us that
It is our issue

Before
Creating us
He kept a
Will for us

In order
To lead us accordingly
He gave His
Spirit to us

Though we have done
Some mistakes in between
Finally he
Made us to walk in his way

Accordingly we live
In everyday life
Then we ask him
What is our mistake?

If he points it
We mend our ways
If we oppose
We are punished for that

Like this as
He leads our life
Where is the opportunity
For him to escape

Therefore he too
Should give account
Then alone he can
Blame us

But if the reason is
Not correct
Then he has to
Give answer to that

Mathigiri, 24-11-2018. 9.15 a.m.

I was thinking about the song which I wrote last night thanking God for the rain. But for some reason, again and again I told that he could have done it before and need not delay this much. As I was thinking in this line, the first line of this song came in my mind. So while I was cooking I began to write this song in my mind. After cooking I came to my room and wrote this song. Bhakti gives this freedom to question even God.

1016 பதில் சொல்லணும்

கடவுளும் கணக்கு
காட்டத்தான் வேண்டும்
காரணம் எதுவென
அவனுக்குத் தெரியும்

படைத்தபின் ஒதுங்கிட
இடமுமே இல்லையே
நம்பாடு எனச்சொல்ல
வழியுமே இல்லையே

படைக்கும் முன்னமே
நமக்கென அவனும்
தன்சித்தம் ஒன்றை
முன்குறித்து வைத்தான்

அதன்படி நம்மையும்
வழியுமே நடத்திட
தன்னாவி தன்னையும்
தந்துமே வைத்தான்

இடையினில் என்னதான்
தவறுமே செய்யினும்
இறுதியில் தன்வழி
சென்றிட வைத்தான்

அதன்படி நாமுமே
அனுதினம் வாழ்கிறோம்
அதன்பின் நம்தவறு
எதுவெனக் கேட்கிறோம்

எடுத்தவன் சொன்னால்
திருத்தியே கொள்கிறோம்
எதிர்துமே நின்றால்
தண்டிக்கப் படுகிறோம்

இப்படி நம்வாழ்வை
அவன் நடத்தும்போது
தப்பிக அவனுக்கும்
வழியிங்கு ஏது

ஆகையால் அவனுமே
கணக்குமே கொடுக்கணும்
அதன்பின்னால் நம்மீது
பழியுமே போடணும்

ஆயினும் காரணம்
சரியில்லை என்றால்
அதற்கான பதிலையும்
அவனுமே சொல்லணும்

மத்திகிரி, 24-11-2018.காலை, 9.15


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles