Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1052

$
0
0

1052 No shortcoming

However there is content in heart
Still there will some shortcoming in it
Whoever come and try to teach
It will refuse to accept it

Which one can we call as completeness?
As there will be some shortcomings in this unstable life
But if we think only that
Where will be the heart to see content in it?

How much fullness god has given to us?
In which he has kept any shortcoming?
He even gave a heart to see fullness
But if we lost it, what can he do?

Once fault finding becomes a habit
Where will be the heart to see fullness?
By changing it and only to see fullness
Where will be any shortcoming in anything?

There is no shortcoming in his creation
There is no change in his law of nature
But definitely he never gave
A fault finding heart

Knowing that it is a kind of mental decease
Knowing the means to remove it
Added to that realizing his grace
We should live each day thinking that

Mathigiri, 31-1-19, 11.10 p.m.

Fault finding is not prudent critic about anything life, but most of the time remains as a decease. Unless one manages to cure it, till the end of the life she has to remain a sick person.

1052 குறையொன்றும் இல்லை

என்னதான் மனதிலே நிறைவிருந்தாலும்
ஏதேனும் குறையொன்று அதனுள்ளே இருக்கும்
எவர்வந்து சொல்லி எடுத்துரைத்தாலும்
ஏனோ மனமதை ஏற்றிட மறுக்கும்

நிறைவென்று நாமிங்கு எதைத்தான் சொல்வது
நிலையில்லா வாழ்வில் குறையுள்ள வரையில்
ஆயினும் அதையே எண்ணிக் கொண்டிருந்தால்
நிறைவைக் கண்டிடும் மனமெங்கு இருக்கும்

எத்தனை நிறைவுகள் இறைவனும் தந்தான்
எவற்றிலே குறையொன்று அவனுமே வைத்தான்
நிறைவைக் காணும் மனதையும் தந்தான்
அதைநாம் இழந்தால் அவன்என்ன செய்வான்

குறை சொல்லிப் பழகி போனபின்னாலே
நிறைவைக் காணும் மனமெங்கு இருக்கும்
அதனை மாற்றி நிறைவைக் காண
அதன்பின் குறையென்று எதிலே இருக்கும்

அவனது படைப்பில் குறையேதும் இல்லை
அவன் வைத்த நியதியில் மாற்றமும் இல்லை
ஆயினும் இந்த குறைகாணும் மனது
அதனை நிச்சயம் அவன்தரவில்லை

அதுஒரு மனநோய் என்பதை அறிந்து
அதனை நீக்கிடும் வழிவகை அறிந்து
அத்துடன் அவனது அருளையும் உணர்ந்து
அனுதினம் வாழணும் மனதிலே நினைந்து

மத்திகிரி, 31-1-19, இரவு, 11.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles