1101 It is better for both of us
Knowing my situation
You are mocking me
Unnecessarily
You become upset with me
When I come to you
You forsake me
But you refuse to give
The reason for that
Are you become upset as I was?
Sulking on the other day
As I didn’t come when you call
That is your longing
Or do you think that
I already belong to you
Or are you troubled that
I am pretending even after knowing your situation
Did you disappeared suddenly
By confusing my mind
Thinking that I try to
Understand you through my buddhi
As you already caught
In the net of my bhakti
And did you gone away
By troubling my atman?
Oh my Lord
Will I lose you?
By searching you
Through my buddhi
Once you mingled you
With body and soul
And stood within
My mind
Just think my
First love for you
If there is any change in it
You tell only that to me
We were never
Ever separated before
Then why this drama
Better tell only that to me
Summer has gone
Rainy season has come
My body also
Become pale (because of separation)
My bangles also fell down
And my shoulders become weak
Thinking the love
My eyes become wet
Oh my Lord
I cannot understand
The breadth and length
And depth of love by buddhi
There is no need
For that to me
It is better for both of us
If you understand this
Therefore don’t
Become upset with me unnecessarily
Don’t give any more
Unnecessary reasons
Don’t allow my body to
Suffer in this cold season
Don’t delay further
To come near to me
(To mingle with me)
Mathigiri, 12-6-2019, 10.30 p.m.
As people are suffering in most parts of India, as rainy season has started (in Kerala) we have a better climate with heavy wind blowing all through the day with much moisture. So naturally this is the season for viraha bhakti. As I was enjoying the cool climate then I thought of writing another song with viraha-bhakti genre and wrote this song.
1101 இருவர்க்கும் நல்லது
என்னிலை அறிந்துமே
ஏளனம் செய்கிறாய்
என்மீது வீணாக
கோபமும் கொள்கிறாய்
உன்னிடம் வந்துமே
உதறியே தள்கிறாய்
அதற்கான காரணம்
சொல்லிட மறுக்கிறாய்
அன்றுநான் ஊடினேன்
என்கின்ற கோபமா
அழைத்ததும் வரவில்லை
என்கின்ற தாபமா
உன்சொந்தம் தானே
என்கின்ற எண்ணமா
உணர்ந்துமே நடிக்கிறேன்
என்பதால் கலக்கமா
பக்தியின் வலையிலே
சிக்கிய உன்னையே
புத்தியால் புரிந்திட
முயன்றேன் என்றெண்ணி
சித்தத்தை குழப்பியே
சட்டென மறைந்தாயோ
சீவனும் கலங்கிட
தூரமே சென்றாயோ
ஊனோடு உயிரும்
ஒன்றாக கலந்தபின்
உணர்வோடு சிந்தையில்
நிறைவாக நின்றபின்
அறிவாலே அறிவது
அவசியம் என்றுமே
அதன்மூலம் ஆராய்ந்து
ஐயனே இழப்பேனோ
ஆதியில் கொண்ட
அன்பையே நினைப்பாயே
அத்திலொரு மாற்றம்
இருந்தால் சொல்வாயே
இருவரும் இதுவரை
பிரிந்ததே இல்லையே
இதுவென்ன நாடகம்
அதைமட்டும் சொல்வாயே
கோடையும் போனது
வாடையும் வந்தது
மேனியும் பசலையால்
வாடியே போனது
கைவளை வீழ்ந்திட
தோள்களும் தளர்ந்தது
காதலை எண்ணியே
கண்களும் கசிந்தது
அன்பின் அகலமும்
ஆழமும் நீளமும்
ஐயனே அறிவினால்
அறிந்திட இயலாது
அதற்கான தேவையும்
எனக்குமே கிடையாது
இதைநீ புரிவது
இருவர்க்கும் நல்லது
எனவே வீணாக
என்னிடம் முனியாதே
இனியும் வேண்டாத
காரணம் சொல்லாதே
வாடையில் மேனியை
வாட விடாதே
விரைந்துமே சேர்ந்திட/வந்திட
தாமதம் செய்யாதே
மத்திகிரி, 12-6-2019, இரவு, 10.30