272 Tomorrow’s burden
Dividing the life
In small parts
And arranging the
Works accordingly
Doing each
Part perfectly
When we live
Joy overflows
We have to
Plan about tomorrow
And we take certain
Decisions for that now
But we should
Stop carrying
Its burden unnecessarily
Today itself
If we began to carry
Tomorrow’s burden today itself
And joining with it
As today’s burden also put pressure on us
Without having
Energy to carry both together
We have to
Face defeat
Only through experience
We should realize this
And we should have
A heart to accept it
Whatever others might
Share about it
With one’s own mind
Should think and accept it
Mathirigi, 1-12-16, 2.45 pm.
I always divide my day in short periods and live accordingly. Even certain works I will do in small parts. Some times when I make some special sweet each day I will do one process and finally complete it when I need to serve. For example, for meeting I will fry all the ingridients to make ‘payasam’ (keer) and keep it in fridge and on the day when I require it, I will just add water, milk, sugar etc. and boil to make ‘payasam’. Some of the pickles which I make will take more than three to fourth month to get ready for use. This helps me to live always in the present, planning for the future but not allowing it to put too much pressure on today’s work.
272 நாளைய பாரம்
சிறுசிறு பகுதியாய்
வாழ்வைப் பிரித்து
செயலை அவற்றின்
எல்லைக்குள் வகுத்து
ஒவ்வொரு பகுதியை
சிறப்பாய் செய்து
வாழும் போது
மகிழ்ச்சியும் வருகுது
நாளைக் குறித்து
திட்டம் போடணும்
இன்றே அதற்கென
முடிவும் செய்யணும்
ஆயினும் அவற்றின்
பாரத்தை வீணே
இன்றே சுமப்பதை
முதலில் நிறுத்தணும்
நாளை பாரத்தை
இன்றே சுமக்க
இன்றைய பாரமும்
சேர்த்து அழுத்த
இரண்டையும் சுமக்க
தெம்பும் இல்லாமல்
இறுதியில் தோல்வியை
சந்திக்க வேண்டும்
அனுபவம் மூலமே
இதையும் உணரணும்
அதையும் ஏற்கும்
மனதும் வேண்டும்
எத்தனைதான் பிறர்
எடுத்துச் சொன்னாலும்
சொந்த அறிவால்
சிந்தித்து ஏற்கணும்
மத்திகிரி, 1-12-16, மதியம் 2.45