276 Questions without answer
Others can easily
Question to anyone
Because they
Don’t need any answer
And we need not
Respond to them
As they don’t know
Why they are asking it
Those who upholds
Only their own views
Other’s explanations
Are not acceptable
Once their ego
Over lord them
They cannot understand
Others position
Should we treat this?
Ignorance
Or should we take the whip
To correct them
Thinking that
Both is not required
Should we keep?
Some distance away from them
I don’t have any
Final response with me
Because I don’t have
Any answer for this
Though I try to advise them
They never repent
And they never yielded
Even to my whipping
Though I want to keep away
They don’t allow me to do that
And what should I do now
I don’t understand
If possible
Give some answer to this
And show some kind of
Mercy towards me
Gurukulam, 27-12-16, 3.10 pm.
When someone accepts moral responsibility then it comes with some authority with it. For example, when a father accepts his moral responsibility as a father to take care of his children, automatically he gets some kind of authority to discipline his children when it required. But if his authority alone is questioned never recognizing the moral responsibility which he took, then no home can survive for long. This is true in every area of life. Of course absolute power and authority are dangerous. But not recognizing the authority which comes along with any moral responsibility no human institution can function properly. And when others only question the authority then in such scenario I don’t have answer to them or don’t know how to tackle such situation.
276 விடையில்லா கேள்விகள்
எளிதாக கேள்விகள்
எவரையும் கேட்கலாம்
ஏனென்றால் அவருக்கு
விடைதேவை இல்லை
எதற்காக கேட்கிறோம்
என்பது புரியார்க்கு
விடையேதும் நாம்கூறத்
தேவையும் இல்லை
தன்நிலை ஒன்றையே
தன்முன்னே வைப்போர்க்கு
எவ்வித விளக்கமும்
ஏற்பதும் இல்லை
அகம் தலைக்கேறியே
ஆர்ப்பாட்டம் செய்ய
அடுத்தவர் நிலையும்
புரிவதே இல்லை
அறியாமை என்று
நாமிதை எண்ணவோ
அகந்தையை இறக்கிட
சாட்டையை எடுக்கவோ
இரண்டுமே வேண்டாம்
என்றுமே எண்ணி
நாம்சற்று ஒதுங்கி
நிற்பது முறையோ
இதற்கொரு முடிவு
என்னிடம் இல்லை
ஏன்னென்றால் என்னிடம்
பதிலேதும் இல்லை
சொல்லியே பார்த்தேன்
திருந்திட வில்லை
சாட்டைக்கும் அவரும்
சரிப்பட்டு வரவில்லை
ஒதுங்கியே போனால்
எனை விடவில்லை
என்ன செய்வேனோ
புரியவும் இல்லை
முடிந்தால் இதற்கொரு
விடையைத் தாருங்கள்
என்மீது சற்றே
இரக்கமும் காட்டுங்கள்
குருகுலம், 27-12-16, மதியம் 3.10