280 A race
In the race of life
When we all run very fast
We don’t know who run along with us
And we don’t have time to look unto them
Nobody is chasing us
And we never run to escape
Even we don’t know
What our goal actually is
As others run, we too run with them
And when few left behind
And few more new people join us
We run competing with each other
When our race become slow
And as we stop to take breathe
Others who ran with us
Never turned back to know what happen to us
This race will continue
Without anybody reaching the actual goal
Yet this race alone will continue
Never finding its end
Someone somewhere began this
But we don’t know who it was
And who will finally end it
We least bother about it
Many will be with us when we run
But when we stop who will stop with us
Whether we run or stop
Nobody will notice it
Though you run along with the crowd
Yet you run all alone
Once you stand back alone
Then you realize it
Run when you need to run
And when you become tired you stop
Once your part is completed
Then forget both of them (running and stopping)
Mathigiri, 12-1-2017, 2.40 pm
Another song reflecting the reality of life. Though we are social animals, yet in life in several areas till the end we have to run alone our own race.
280 ஒரு ஓட்டம்
வாழ்க்கை என்னும் ஓட்டத்திலே
விரைந்து ஓடும் போதினிலே
கூட வருவோர் எவரென்று
நின்று பார்க்க நேரமில்லை
துரத்தி எவரும் வரவில்லை
தப்ப எண்ணி ஓடவில்லை
இலக்கு கூட எதுவென்று
இன்னும் சரியாய்த் தெரியவில்லை
பிறரும் ஓட நாமோட
பின்னால் பலரும் நின்றுவிட
புதிதாய் சிலரும் இணைந்துகொள்ள
போட்டிப் போட்டு ஓடுகின்றோம்
நமது ஓட்டம் தளரும்போது
நாமும் சற்று தயங்கிநிற்க
உடன் ஓடி வந்தவரோ
திரும்பிக் கூடப் பார்க்கவில்லை
இந்த ஓட்டம் தொடர்ந்திருக்கும்
எவரும் இலக்கை அடையாமல்
ஓட்டம் மட்டும் தொடர்ந்திருக்கும்
முடிவு என்றும் காணாமல்
என்றோ எவரோ தொடங்கிவைத்தார்
யாரென நமக்குத் தெரியவில்லை
இறுதியாக எவர் முடிப்பார்
என்பதைப் பற்றிய கவலையில்லை
ஓடும்போது பலர் இருப்பார்
நிற்கும் போது எவரிருப்பார்
ஓடினாலும் நாம் நின்றாலும்
எவரும் கண்டு கொள்ளமாட்டார்
கூடத்தோடே நாம் ஓடினாலும்
தனித்தே நீயும் ஓடுகிறாய்
தனித்து நின்ற பின்னாலே
அதனை உணர்ந்து கொள்கிறாய்
ஓடும்போது நீயும் ஓடிவிடு
தளரும்போது நீ நின்றுவிடு
உனது பங்கு முடிந்தபின்பு
இரண்டையும் கூடநீ மறந்துவிடு
மத்திகிரி, 12-1-2017, மதியம் 2.40