298 Again talking
I speak by remaining silent
But when I speak I babble
Then I realize that
There is no use in too much talk
Yet by talking (much)
I am get trapped
Then I do
Thousands of argument (to justify my talk)
When finally
That too becomes mere waste
Finally I keep silent
By shutting my mouth
Yet in my heart
Constantly thinking many things
Continuously talking
I cheat myself (as if I remain silent)
Finally though
There is no use in talking (much)
As I born as a human being
Again I began to talk.
12-4-17, (13-4-17) Mathigiri, 12.15 am
Though I prefer a life of recluse and not to talk much, yet I am very talkative. Several times I feel that I am talking too much without any use. Though I try to limit my talk, yet all my writings, including all my poems are one way another form of talking. Even when I keep quiet and not talk, yet in my mind I talk too much. Though I become tired of it and try to avoid it, yet I constantly fail in it. This song is another such vain talk about rebuking me for talking too much.
298 மீண்டும் பேசுறேன்
பேசாது பேசுறேன்
பேசினால் உளறுறேன்
பேச்சினால் பயனில்லை
என்பதை உணருறேன்
ஆயினும் பேசிதான்
அகப்பட்டுக் கொள்கிறேன்
அப்புறம் தர்க்கம்தான்
ஆயிரம் செய்கிறேன்
அதுகூடப் பயனின்றி
இறுதியில் போனபின்
மீண்டும் வாய்மூடி
மொளனம் காக்கிறேன்
ஆயினும் உள்ளத்தில்
அசைபோடும் எண்ணத்தில்
என்னவோ பேசிதான்
ஏய்க்கிறேன் என்னைநான்
இறுதியில் பேச்சினால்
பயனில்லை என்றாலும்
மனிதனாய்ப் பிறந்ததால்
மீண்டுமே பேசுறேன்
12-4-17, (13-4-17) மத்திகிரி, இரவு, 12.15