Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1112

$
0
0

1112 Your will

 

Living with me

Not saying anything

Understanding

What is my need?

Preparing it

Before I ask for it

You provided

In proper time

 

You stood

Ready to serve

Not talking

Till I talk with you

Even before

I open my mouth to tell

You understand my thought

By mere my look

 

Understanding

All my burdens

Knowing also

My weakness

When I required

You gave your shoulders

When I had strength (to do)

You stood bye

 

There is none

Who understood me like this?

There is none who serve

Knowing my heart

Did you come seeking me?

Only for this

Though you are god

Still you served me

 

I have never seen

One like this

I don’t know

The reason for this

But there is

No need for it

Even if I understood

There is no use in it

 

You lived by

Doing seva to your disciples

You went and sought

Those who are in need

But as these are

Not enough!

You gave yourself

To redeem us

 

Though you remain a god

Who was searched by every body?

For some reason

You came seeking after us

By this you helped us

To know you

You also kept this

As your will for us

 

Accepting it

This slave also came

I too keep ready

Only to do seva

I went and sought

Those who are in need

I bow your feet

By doing seva to them

 

Mathigiri, 22-07-2019, 11.15 p.m.

 

Serving others knowing their need is one thing, but serving them knowing their weakness is much greater. This is what god has done in our Lord for us.  When we are weak he steps in to give his shoulders. When we can manage on our own he stands bye.  It is true that god helps those who help themselves.  But he serves those who cannot help themselves.  And this is his will for all his bhaktas also.

 

1112 உன் சித்தம்

 

ஏதுமே பேசாமல்

என்னுடன் இருந்து

என்தேவை எதுவென

என்பதும் தெரிந்து

கேட்டிட்டும் முன்பாக

ஆயத்தம் செய்து

நேரம் பார்த்து

கொண்டுமே சேர்த்தாய்

 

நானாக வந்து

பேசிடும் வரையில்

நீயேதும் பேசாமல்

அரைக்காட்டி நின்றாய்

சொல்லிட வாயைத்

திறந்திடும் முன்னே

கண்ஜாடை அசைவிலே

கருத்தினைப் புரிந்தாய்

 

எனக்குள்ள பாரம்

அனைத்தையும் புரிந்து

என் பலவீனம்

அதனையும் தெரிந்து

தேவைப் பாடும்போது

தோளுமேத் தந்தாய்

தெம்புள்ள போது

விலகியும் நின்றாய்

 

இதுபோல என்னைப்

புரிந்தவர் இல்லை

என்னுள்ளம் அறிந்து

நடப்பவர் இல்லை

இதற்காத் தானோ

எனைத்தேடி வந்தாய்

இறைவனாய் இருந்தும்

பணிசெய்து நின்றாய்

 

இதுபோல எவரையும்

நான் கண்டதில்லை

இதற்கான காரணம்

புரியாவும் இல்லை

ஆயினும் அதற்கு

அவசியம் இல்லை

அறிந்தாலும் அதனால்

பயனேதும் இல்லை

 

தொண்டர்க்குத் தொண்டு

செய்துமே வாழ்ந்தாய்

தேவை உள்ளோரை

நாடியே சென்றாய்

இவைகள் மட்டுமே

போதாது என்று

எம்மையே மீட்க

உன்னையேத் தந்தாய்

 

எல்லோரும் தேடும்

இறைவனாய் இருந்தும்

ஏனோ எம்மையேத்

தேடியே வந்தாய்

இதன்மூலம் உன்னைப்

புரிந்திட வைத்தாய்

இதையே எமக்கும்

சித்தமாய் வைத்தாய்

 

அதனை ஏற்று

அடிமையும் வந்தேன்

அரைக்கட்டித் தொண்டு

செய்யவே நின்றேன்

தேவை உள்ளோரை

நாடியே சென்றேன்

தொண்டுமே செய்து

உன்னடிப் பணிந்தேன்

 

மத்திகிரி, 22-07-2019, 11.15 p.m.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles