316 Not yet learnt
Remain bit indifferent (over looking)
And even if you see, try to close your eyes
Even if others tell, don’t listen
And don’t get trapped unnecessarily
Don’t pour down unnecessary words
In the name of advising others
They will listen to what all you say
But find fault in it at the end
Those who sought your counsel
Will began to give advice to you
Later you will lament thinking that
‘Is it necessary for me?’
Remain quiet keeping your mouth shut
And don’t go for unnecessary contentions
As I am experienced, I am telling this to you
Taking pity on you
But even after learning, by giving this advice
Again I have done the same mistake
I have never learnt even after learning several times
But there is no lack for such songs like this.
5-6-2017, Bangaluru, 6.00 pm.
Don’t give advice unless it is sought. But better don’t even give advice even if it sought. The best way to escape for a wise person is to live like water on the lotus leaves. He knows that no one is going to adhere to his advice. On the other hand sometimes not only others will find fault in it, but began to give advice to him. Anyhow at the end I thought that by writing this poem also I do the same mistake which I recommend others not to do.
316 புத்திவரலை
பட்டும் பட்டாமலும் இருந்துவிடு
பார்த்தாலும் கண்களை மூடிவிடு
சொன்னாலும் காதிலே வாங்கிக்காதே
வீணாக வம்பிலே மாட்டிக்காதே
ஊருக்கு உபதேசம் செய்ய எண்ணி
வீணாக வார்த்தையைக் கொட்டிடாதே
சொல்லிடும் எல்லாமே கேட்டிடுவார்
சொன்னதில் குற்றமும் கண்டிடுவார்
ஆலோசனை கேட்க வந்தவரே
அறிவுரை உனக்கும் சொல்லிடுவார்
“தேவையா இதுவுமே” என்றுஎண்ணி
பின்னாலே வீணாகப் புலம்பிடுவாய்
வாயைமூடி நீயும் இருந்துவிட்டு
வம்புக்குப் போகாமல் காத்துவிடு
பட்டதால் நானிதைச் சொல்லுகிறேன்
பரிதாபம் உன்மீது கொண்டுதானே
ஆயினும் இதைகூட உனக்குச்சொல்லி
அறியாமல் தவறுநான் செய்துவிட்டேன்
பட்டாலும் புத்தியோ வரவுமில்லை
இந்தப் பாட்டுக்குமட்டும் குறைச்சலில்லை
5-6-2017, பெங்களுரு, மாலை, 6.00