321 Dream came to an end
I lived in an imaginary world
And had several visions of my own
As someone wokeup after having a dream
I forgot all of them
Constructing so many castles
And extending them with Maya
I put desire as the watchman for that
Tried to accumulate more and more
Though it is beyond my reach
Somehow, still I had some longing for that
However I tried I couldn’t get it
But the desire is never gone
I wandered many days
Seeking for things which are not necessary for me
When I finally I got them
I lost them within few seconds
My mind never comes forward
To accept the reality of life
Though I know that it won’t be useful
I never gave up my dreams
But I don’t know
Where is the solution for this?
When I woke up from my sleep
There is no place for dream there (anymore)
Time has come to wokeup
The solution which I sought also came
I understood the truth which I was searching
The dreams which I saw also came to an end.
Mathigiri, 18-6-2017, 11.00 pm.
I often live in my own imaginary (foolish) world. In the past also in the present I imagine so many things about my life. But nothing materializes as I imagined. It is like seeing a dream which even I cannot remember after I get up. Though I know that I can never live in my own imaginary world, yet I cannot give it up imagining about it. May be the hope in life is sustained because of these dreams.
321 முடிந்தது கனவு
கற்பனை உலகில் வாழ்ந்திந்திருந்தேன்
கனவுகள் பலவும் கண்டிருந்தேன்
சொப்பனம் கண்டு விழித்தவன்போல்
கண்டதை யெல்லாம் மறந்துவிட்டேன்
மனக் கோட்டைகள் பலகட்டி
மாயைக் கொண்டு விரிவாக்கி
இச்சையை அதற்கு காவல்வைத்து
இன்னமும் சேர்க்க ஆவல்கொண்டேன்
எட்டாக் கனிஎனத் தெரிந்திருந்தும்
ஏனோ அதன்மேல் ஆசைவைத்தேன்
எத்தனை முயன்றும் கிட்டவில்லை
ஆயினும் ஆசையோ விடவில்லை
தேவை இல்லா ஒன்றுக்காய்
தேடி அலைந்தேன் நாள்கணக்காய்
இறுதியில் கையில் கிடைத்தபோது
ஏனோ இழந்தேன் ஒருநொடியில்
உள்ளதை ஏனோ ஏற்றுக்கொள்ள
ஒருபோதும் மனம் முன்வரலை
உதவா தென்று தெரிந்திருந்தும்
கனவை நானும் விடவில்லை
இதற்கும் விடிவு எங்கிருக்கு
எனபதும் எனக்குத் தெரியவில்லை
தூக்கத்தை விட்டு எழும்போது, வீண்
கனவுக்கு அங்கே இடமில்லை
விழிக்கும் நேரம் வந்தாச்சு
ஏங்கிய விடிவும் கிடைச்சாச்சு
தேடிய உண்மை விளங்கிடுச்சி
இப்போ கனவும் முடிஞ்சுபோச்சு
மத்திகிரி, 18-6-2017, இரவு 11.00