325 Time get wasted
Don’t waste your time
Don’t write unnecessary poems
Saying that your are writing for your need
Don’t make others a mad person
You are straining your buddhi
And think foolishly
Just to join the first and last words
You merely add mere words
Thinking that you are a special person
And estimating more than what you are
Don’t try to create history
And don’t go beyond your limit
Don’t you know how to spend time?
And cannot you think properly
You should learn by observing others
And know how to live wisely
What you have achieved so far
By all the poems that you have written
Much precious time alone get wasted
And many pages also get spoiled
Now why even you are writing this too
You never repent how much advice I give
Do whatever you want that is your problem
Now leave me alone and let me go
Mathigiri, 23-6-2017, 10.30
After doing my regular reading, I saw that still there was 20 minutes left to go and prepare Tiffin for my mother. Then I opened my computer to type some notes from the book. That time I said to myself ‘don’t waste any time’. Then as the first word began to inspire I write it down, but not paying much attention I continued to type my notes. In the night when I recalled that line again, to tease me for writing poems unnecessarily I wrote this song rebuking me.
325 நேரம் பாழாச்சு
வீணாக நேரத்தை கழிக்காதே
வேண்டாத கவிதையும் எழுதாதே
எனக்காக எழுதறேன் எனச்சொல்லி
எவரையும் பைத்தியம் ஆக்காதே
மூளய கசக்கிப் பிழிஞ்சுக்கிற
முட்டாள் தனமா யோசிக்கிற
எதுகை மோனைய இணைத்துவைக்க
என்னவோ வார்த்தைய சேர்த்துக்கிற
தனிப்பிறவி என எண்ணிக்கிட்டு
தகுதிக்கு மிஞ்சி நினச்சிக்கிட்டு
சரித்திரம் படைக்க நினைக்காதே
சக்திக்கு மிஞ்சி செய்யாதே
நேரத்தைப் போக்க வழியில்லையா
நல்லதா யோசிக்கத் தெரியலையா
பிறரை பார்த்துப் புரிஞ்சிக்கணும்
புத்தியா பிழைக்கத் தெரிஞ்சிக்கணும்
இதுவரை எழுதிய கவிமூலம்
என்ன பயனைநீ கண்டாய்
பலமணி நேரம் பாழாச்சு
பக்கங்கள் எத்தனை வீணாச்சு
இதையும் எதற்கு எழுதராய்நீ
எத்தனை சொல்லியும் திருந்தலைநீ
என்னவோ செய்துகொள் உன்பாடு
இப்போதைக்கு என்னை விடு
மத்திகிரி, 23-6-2017,, இரவு 10.30