உன்னிடம் வரும்போது
ஒருவித அமைதி
உருவாகி நிறைக்குது
எனக்குள் அமைதி
சிலநொடிகளேனும்
சிந்தையை ஆளுது
சிதரிடும் எண்ணத்தை
உன்னிடம் திருப்புது
எத்தனை முயன்றாலும்
என்னாலே ஆகாது
நீயன்றி நான்பெற
வழியும் கிடையாது
நீஆள வரும்போது
உவகை பெருகுது
உன்னிந்த அதிகாரம்
பணிவைத் தருகுது
இதுவன்றி வேறெதும்
என்மனம் நாடாது
உனையன்றி வேறொன்றில்
நிறைவும் கிடைக்காது
அடிகடி அதனால்
உன்னிடம் வருகிறேன்
நீதரும் அமைதியை
நாடியே பெறுகிறேன்
மத்திகிரி, 19-9-16, மதியம் 2.55