343 Don’t lament
How much you lament
There is no deliverance for you from this
Don’t ask others about it
Because there is no answer to this
If others put you in prison
You can try to come out from it
When you put yourself in prison
How are you going to get freedom?
Life is in the prison of the body
The heart is in the prison of life
In the prison of heart is your aham (I, or ego)
Then where is the freedom from anyone of them?
Life, heart and ego joining together
Try to break the body
But the body is keeping
All of them under its control
In the mean time heart and ego
Often fight with the life.
Then joining together
They all lament
When each one is lamenting like this
Who will listen to your lamentation?
Unless God taking mercy on you
Nobody can give deliverance to you
Therefore don’t lament unnecessarily
Don’t get agitated and become upset
Till he will call you
You better live this life which he gave to you
Mathigiri, 18-7-2017, 10.30 am.
The constant struggle between the body, soul and life is indeed a burden. Sometimes I become very tired and wanted that kind of life where I can have minimum work. But as long we have a body and a mind to keep us busy there is no respite from both of them. So unless God gives us deliverance from this, there is no point of lamenting about such struggle and somehow I have to live it.
343 புலம்பாதே
என்னதான் நீயும் புலம்பினாலும்
இதிலொரு விடுதலை உனக்கில்லை
ஏனென்று எவரையும் கேட்காதே
இதற்கும் விடையோ கிடையாது
மற்றவர் உன்னை சிறைபிடித்தால்
முயன்றால் விடுதலை பெறலாம்நீ
உன்னை நீயே சிறைவத்தால்
விடுதலை எப்படி பெருவாய்நீ
உடலென்ற சிறைக்குள் உயிருருக்கு
உயிரன்ற சிறைக்குள் மனமிருக்கு
மனமென்ற சிறைக்குள் அகமிருக்கு
விடுதலை இதிலே எங்கிருக்கு
அகமும் மனமும் உயிருடனே
உடலை உடைக்க முயல்கின்றன
உடலோ இவை அனைத்தையுமே
தனது கைக்குள் வைத்திருக்கு
அகமும் மனமும் இடையிடையே
உயிருடன் சண்டை இடுகின்றன
பிறகு உயிருடன் சேர்ந்துகொண்டு
ஒன்றாய்ப் புலம்பி அழுகின்றன
அவரவர் இதுபோல் அழும்போது
எவருன் புலம்பலைக் கேட்டிடுவார்
இறைவனே இறங்கிக் கொடுப்பதன்றி
எவரிங்கு விடுதலை தந்திடுவார்
அதனால் வீணாய்ப் புலம்பாதே
ஆத்திரம் அவசரம் கொள்ளாதே
அவனே உன்னை அழைக்கும்வரை
அவந்தந்த வாழ்வை வாழ்ந்துவிடு
மத்திகிரி, 18-7-2017, காலை 10.30