350 Union and separation
If we carry unnecessary burden
Only we will become tired
And it is bit difficult to
Renew the severed relationship
Those who went away denying relationship
Won’t understand the loss of others
And when they come back
They won’t find the same warmth in that relationship
Unless they understand the pain of loss
However we try to communicate, they won’t understand
And when they repent and understand
None will be with them to give comfort
Why this kind of strife only in human relationship
And why this much breaks only in human relationship
And those who live like animals
Cannot understand this pain
There is relationship between ‘union and separation’
Without separation there is no value in relationship
Though they reconciled again
Yet the friction won’t go that much easily
Union and separation is part of nature
Even if are again united, separation is inevitable
But inner peace is possible only when we
Celebrate relationship as much as possible
Mathigiri, 30-7-2017, 11.10
As I was reflecting the previous song, I thought about the animal world which does not suffer due to relationship. Of course they live by instinct. Yet there too is a close bond of relationship exists as we find among the elephants. But we human alone have a more tragic life in living with relatives. But accepting that too is part of our life and doing our best to celebrate relationship is the best option left with us to have inner peace.
350 உறவும்-பிரிவும்
தேவையற்ற பாரத்தை சுமந்தால்
தோள்கள் இரண்டும் ஓய்ந்துதான் போகும்
தொடர்பற்று வாழ்ந்த உறவை மீண்டும்
புதுப்பிக்க முயல்வது சற்று கடினம்
வேண்டாம் என்று ஒதுங்கிப் போனவர்
பிறர் பெறும் இழப்பை புரியமாட்டார்
மீண்டும் தேடி வந்திடும் போது
முன்போல் உறவைக் காணவும் மாட்டார்
இழப்பின் வலியை புரிகின்ற வரைக்கும்
எப்படிச் சொன்னாலும் உணரவே மாட்டார்
உணரும் போது தேறுதல் தந்திட
எவரும் அருகில் இருக்கவும் மாட்டார்
மனித வாழ்வில் ஏனிந்த உரசல்
மனித உறவில் (மட்டும்) வருகுது விரிசல்
விலங்குகள் போல வாழ்ந்திருப்போருக்கு
இந்த வேதனை சற்றும் புரிந்திருக்காது
உறவுக்கும்-பிரிவுக்கும் உள்ளது உறவு
பிரிவதன்றி உறவுக்கு மதிப்பிருக்காது
பிரிந்தவர் கூடி பேசிவிட்டாலும்
நெருடலுக்கு ஒரு முடிவிருக்காது
சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதி
சேர்ந்தாலும் பிரிவது நிச்சயம் உறுதி
முடிந்த வரையில் உறவைக் கொண்டாடி
வாழ்வதில் இருக்குது மனதிற்கு அமைதி
மத்திகிரி, 30-7-2017 இரவு 11.10