353 What kind of worry you have?
You have some worry
And there is no means to get rid of them
You preached to the world
But where is the one for you?
There is no point
In lamenting all that went in the past
And even if you began to think what is going to come
There is no hope to change them
The world is not functioning
For you separately
There is no time
To think about others
You have too many
Unnecessary dreams
And what is the need
For you to carry them unnecessarily
Just carry
Other’s burden
Then you will realize
How pitiable are they
They even run
Carrying you too
Not realizing this
You are murmuring
Many don’t have
The comfort that you have
Forgetting that
You are getting agitated much
Giving up what you have
And longing which is not you have
Taking deep sigh
You are lamenting unnecessarily
What kind of worry
You have? Think that first.
You sit and eat
Not toiling much
Think that first
And then tell me
Now shut up your mouth
And first listen this
Mathigiri, 10-8-2017, 4.30 am.
Self-centeredness often makes one to focus on her personal issues than to think about her relationship which one way affects others—and also her own life. Only when we began to think about others, their issues, problems and worries we can soberly realize about so many advantages that we enjoy relatively more easily than others. Often in my life, I keep me at the centre of my life and approach every other thing. Though I need to overcome this self-centeredness, yet this is a reality. So this morning when I began to think various issues that I have to handle in everyday life (and also in future), I realized that more than others I have an easy and relatively comfortable life. As I began to reflect about it, I wrote this song rebuking my self-centeredness.
353 என்ன கவல
மனதில் ஒரு கவல
மாத்த வழி இல்ல
ஊருக்குமே சொன்ன
உனக்கு வழி என்ன
போனதையே நினச்சு
புலம்பிப் பயன் இல்ல
வருவதையும் நினச்சா
மாத்த வழி இல்ல
உனக்கு மட்டும் தனியா
உலகம் இயங்க வில்ல
பிறரைப் பத்தி நினைக்க
நேரம் எவர்க்கும் இல்ல
தேவையற்ற கனவு
ரொம்ப இருக்கு உனக்கு
வீம்புக்கேனும் சுமக்க
தேவை என்ன உனக்கு
மத்தவங்க பாரம்
சுமந்து பாரு நீயும்
அப்புறமா புரியும்
அவங்க ரொம்பப் பாவம்
உன்னையுமே சுமந்து
ஓடுறாங்க அவங்க
உணரமறுத்து நீயும்
முணுமுணுக்கிறயே நாளும்
உனக்கு உள்ள சொகுசு
பலர்க்கு இங்கே இல்ல
அதையும் மறந்து போட்டு
அலட்டிக்கிற நாளும்
இருக்கிறத விட்டு
பறக்கிறத பாத்து
பெருமூச்சு விட்டு
புலம்பரையே வீணே
உனக்கு என்ன கவல
நினைச்சுப் பாரு கொஞ்சம்
உழைக்காம குந்திகிட்டு
திங்கிறயே நீயும்
அத முதல எண்ணு
அப்புறமா சொல்லு
இப்ப வாய மூடு
இத முதல கேளு
மத்திகிரி, 10-8-2017, காலை, 4.30