357 Don’t confront
Don’t confront
Unnecessarily
And if they refuse to come close
You too reject them
Don’t severe your relationship
With those who are close to you
And if they don’t want to come close
Don’t run afar them
Unless one has
True desire
Relationship cannot be sustained
Realize this first
Unless both sides
Recognize the need (for each other)
Onside effort
Won’t be useful
When they cannot
Understand the greatness of relationship
However we teach
It won’t go in their head
When we go seeking
Voluntarily after them
They won’t have the
Same kind of love that we have
So when they come
Welcome and show love
And after coming if they began to confront
Then be patient
When you are alive
Celebrate relationship
If you refuse to accept this
Then you face your own funeral
Mathigiri, 19-08-2017, 10.30 pm.
Though we can never chose our relatives, yet unless, like friendship, it is properly nurtured, the cordial relationship among the relatives cannot be sustained. Of course we can never break our relationship with them forever, though both sides might keep away from each others. But making always one side effort to maintain that relationship will not only make us feel tired but it might even irritate others, as they are not interested in it. As I was reflecting on this topic, I wrote this song.
357 மல்லு கட்டாதே
ஒட்டாத உறவுடன்
கட்டாதே மல்லு
ஒட்டவே மறுத்தால்
மறுத்துநீ தள்ளு
கிட்டே உள்ளோரை
வெட்டி விடாதே
சேர மறுப்போரை
துரத்திச் செல்லாதே
உள்ளாக ஆர்வம்
இல்லாது போனால்
உறவும் நிலைக்காது
அறிந்திடு முன்னால்
இருபுறம் தேவையும்
இல்லாத போனால்
பயனும் இருக்காது
ஒருபுறம் முயன்றால்
உறவின் உயர்வை
உணராத போது
சொன்னாலும் அவர்க்கு
மண்டையில் ஏறாது
நாமாகத் தேடி
போகின்ற போது
நாம்கொண்ட அன்பு
இருக்காது அவர்க்கு
வரும்போது வரவேற்று
அன்புமே காட்டு
வந்தபின் முரண்டால்
பொறுமையைக் காட்டு
இருக்கின்ற வரையில்
உறவைக் கொண்டாடு
இதைஏற்க மறுத்தால்
பிறகுநீ திண்டாடு
மத்திகிரி, 19-08-2017, இரவு 10.30