361 No other alternative except change
There is no comfort without encouragement
There is no life without having love
There is no heart without undergoing some change
There is no alternative other than forgiveness
There is none who lived
Without any errors or mistakes
And there is none who
Ever ignored others errors and mistakes completely
There is no alternative to this truth
Which becomes part of our life?
Yet there is no human life
Without having an alternative to that
When we see the shortcomings in other’s life
We should not forget to see all the good in them
Unless we manage to see some good in them
We should not tell only about their shortcomings
There alone the change should come
For that some change is required in our heart
Forgiveness alone is the only mantra
Which can bring that change?
When we began to forgive others
Automatically love will come to forefront
And love and forgiveness joining together
Comfort will come automatically (for both side)
Mathigiri, 26-8-2017, 11.10
There is none who always ignore and forget other’s mistakes and short comings. Even God cannot do that. And those who pretend that they overlook others mistakes and short comings are doing more damage to themselves as they will never find comfort in it. It is better to count the mistakes and short comings in others life, simultaneously seeing many good things in them. Then forgiving and forgetting can do miracle by giving comfort to both sides. But those who pretend that they ignore other’s shortcomings and mistakes alone will continue to live with an uncomfortable life.
361 மாறுதல் இன்றி வாழவில்லை
ஆறுதல் அன்றி தேறுதல் இல்லை
அன்பன்றி உலகில் வாழ்வுமே இல்லை
மாறுதல் இன்றி மனதுமே இல்லை
மன்னித்தல் அன்றி மாற்றுமே இல்லை
குற்றங்கள் குறைகள் அற்றவராக
வாழ்ந்த மனிதர் எவருமே இல்லை
குற்றங்கள் குறைகளை கண்டுகொள்ளாமல்
வாழ்ந்த மனிதர் எங்குமே இல்லை
மனித வாழ்வில் அங்கமய்ப் போன
இந்த உண்மையில் மாற்றமே இல்லை
ஆயினும் அதற்கு மாற்றம் ஒன்று
இல்லாமல் மனித வாழ்வுமே இல்லை
குற்றங்கள் குறைகளை எண்ணிடும் போது
குணத்தையும் காண மறக்கலாகாது
நன்மைகள் சிலவற்றை காண்கின்றவரையில்
குறைகளை மட்டுமே சொல்லக் கூடாது
அங்குதான் மாறுதல் தோன்றிட வேண்டும்
அதற்கு மனதிலே மாற்றமும் வேண்டும்
மன்னிக்கின்ற தன்மை ஒன்றே
மாற்றத்தைச் செய்யும் மந்திரமாகும்
மன்னிக்கத் தொடங்க முயலும் போது
அன்புமே தன்போல் முன்வந்து நிற்கும்
அன்புடன் மன்னிப்பு இணைந்திடும் போது
ஆறுதல் தன்போல் வந்துமே கூடும்.
மத்திகிரி, 26-8-2017, இரவு 11.10