Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 386 and 387

$
0
0

386 Sweetness in loneliness

 

We can find sweetness even in loneliness

When we get such an opportunity then we can realize it

 

Once the heart becomes tired after too much friction (with others)

Along with the body when the mind also becomes tired

The heart will seek some kind of loneliness

And will find some kind of sweetness forgetting oneself

 

Though we born with parents and relatives

Though we grew along with them and friends

There will be a longing within the heart

It will long to live alone for some days

 

When we born we born alone

When we will go, we will go alone

Though we live with others in between

Yet the heart will long to remain alone

 

However I tell about it others won’t understand it

How much I explain they cannot understand it

Once lived alone for one time

Then they would never like to lose it again

 

I am telling this only after knowing this personally

I invited to come here so that you also can receive it

But don’t come even by mistake

And don’t spoil my loneliness

 

Gurukulam, 9-10-2017, 11.45 pm.

 

When Kannan called this night and teased me by saying ‘what, do you find joy in loneness’? (என்ன தனிமையில் இனிமையா) This he often does.  In response I said, ‘No words to explain.  I am enjoying my time alone here.  Then I sang the first line of this song with the same time in which the original film song by Kannadasan in Kalyanapparisu was composed. Then Kannan teased me to write it full and send. So this night I wrote this song to tease Kannan.  Only those who know Tamil can understand as the original is a romantic song in which the heroin teases the hero and tries to persuade to love her, as he remains single.  But I wrote this song just opposite to its meaning.  This morning (10-10-2017) when I went for my walk, as I recalled my song, then I began to write completely opposite to what I have written by saying that it is not possible to find joy in loneliness.  And the next one is just opposite to what I wrote in poem 386.  When the heroine sang in the film to tease the hero, after his love affairs with her failed, he will later sing the same song with melancholic note. So the next song should be sung in the same melancholic note to understand the contrast between these two songs.

 

387 There is no joy in loneliness

 

One way loneliness is cruel indeed

And it is really a tragedy in many people’s life

 

So for they have lived as a family with others

And they are used to be with crowds and people

Though friction comes in relationship

Till they prefer to live with others

 

As they born with parents and relatives

And as they grew up with friends and others

However much crack comes in relationship

They would never prefer to live alone

 

Though we born alone

Though we will go alone when we will die

Once we lived with others while living

The heart will refuse to live alone

 

As I realized this I share with you

As I clearly understood this I tell you

If they lived one time alone

They would never prefer to have it again

 

As I experienced this I tell this to you

And I request you to understand this

Therefore you never live alone

And don’t try to live like me (alone)

 

Gurukulam, 10-10-2017, 6.30 am.

 

386 தனிமையில் இனிமை

 

தனிமையிலே இனிமை காண முடியுமே

அதை பெறும்போது உணர்ந்துகொள்ள முடியுமே

 

உரசி உரசி ஓய்ந்து மனம் போனபின்னே

உள்ளமோடு உடலும்கூட ஓய்ந்தபின்னே

தனிமை நாடி மனதும் கூட ஓடிடுமே

தன்னைமறந்து இனிமையும் கண்டிடுமே

 

சொந்த பந்தம் சுற்றமுடன் பிறந்தபோதும்

உற்றம் சுற்றம் நண்பரோடு வளர்ந்த போதும்

இதயத்திலே ஏக்கம் ஒன்று இருந்திடுமே

என்றைக்கேனும் தனித்திருக்க விரும்பிடுமே

 

பிறக்கும்போது தனித்துதானே பிறந்துவந்தோம்

போகும்போதும் தனித்துதானே போய்விடுவோம்

இடையினிலே பிறருடனே வாழ்ந்திருந்தும்

இதயம் மட்டும் தனிமைநாடி ஏங்கிவிடும்

 

இதையும்கூட எடுத்துச் சொன்னால் புரியமாட்டார்

எத்தனைதான் விளக்கினாலும் அறியமாட்டார்

ஒருமுறைதான் தனிமையிலே இருந்தபின்னே

ஒருபோதும் அதை இழக்க விரும்பமாட்டார்

 

அறிந்துதானே நானும் இதை உனக்குச் சொன்னேன்

அதை நீயும் பெறவேண்டி வரவும் சொன்னேன்

ஆனாலும் தவறிகூட வந்திடாதே

என் அமைதியை நீயும் குலைத்துவிடாதே

 

குருகுலம், 9-10-2017, இரவு 11.45

.

387 இனிமையில்லை தனிமையில்

 

தனிமை கூட ஒருவிததில் கொடுமைதான்

அது வருவதுமே பலர்வாழ்வில் துயரம்தான்

 

குடும்பமாக வாழ்ந்து அவர் பழகிவிட்டார்

கூட்டத்திலே கலந்திருந்து மகிழ்ந்து விட்டார்

உரசுவதால் மனதும் உடலும் ஓய்ந்தபோதும்

உறவுடனே வாழ்வதையே விரும்புகிறார்

 

சொந்த பந்தம் சுற்றமுடன் பிறந்ததினால்

உற்றம் சுற்றம் நண்பரோடு வளர்ந்ததினால்

எத்தனைதான் விரிசல் உறவில் வந்தபோதும்

என்றைக்குமே தனித்திருக்க விரும்பமாட்டார்

 

தனித்துமே பிறந்து நாமும் வந்தபோதும்

போகும் போது தனித்துமே போனபோதும்

இடையினிலே உறவுடனே வாழ்ந்தபின்னே

தனித்துவாழ இதயமுமே மறுத்துவிடும்

 

இதையும்கூட புரிந்தது தானே நானும் சொன்னேன்

இதயத்திலே விளங்கியதால் விளக்கிச்சொன்னேன்

ஒருமுறை தனிமையிலே வாழ்ந்தபின்னே

ஒருபோதும் அதையும் அவர் நாடமாட்டார்

 

அறிந்ததால் இதையும் கூட உனக்குச் சொன்னேன்

அதையும் நீயும் புரிந்துகொள்ள வேண்டிக் கொண்டேன்

ஆகையினால் தனித்து நீயும் வாழ்ந்திடாதே

என்னைப் போல இருந்திடவும் எண்ணிடாதே

 

குருகுலம், 10-10-2017, காலை 6.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles