397 What a joy
What a joy is there
When we get it back which we have lost
Only when we get back after losing it
Then alone we can realize this.
We can understand the taste (of the food)
Only after if we eat after feeling hungry
Those who never feel hungry
How can they understand this?
How can we tell that?
What actually we have lost?
It is impossible to live
Without losing something in life
It is not new thing
To get last of materials
And wealth and materials
Never remain permanent in life.
Time will also flee in life
And will be gone blindly
Similarly the age will go
Once we have born on earth.
The body will be worn out
And we will become old
And all the pleasures that we sought
Will disappear soon.
Losing all these are
Natural one in life
And we can never get a life
In which we never lost something.
But when it comes
To relationship
That is not easy to
Get lost.
Whether we like or hate
It won’t disappear easily
We also got it
Never sought by us.
The one which we
Received in birth
Will also continue
Even after death.
And losing such relationship
Is very hard indeed
But this kind of loss
Will often happen in life.
When we lost it
Then alone we can understand its pain
And when we get it back
We can understand its joy.
Mathigiri, 4-1-2018, 1.50 pm.
Recently we had an interesting discussion about developing relationship and friendship. In that time I said that between Relatives and Friends, relatives are more important as we born and die with them. Though friendship is important I know several people lived and still living without having many close friends with them. But none can live without relatives and relationship with them. Several times we lose our friends due to many reasons. Though we might miss them, yet we won’t find the loss that much great like that when we miss our (close) relatives. And particularly the value of relatives we realize when we miss them and regain them. As I was reflecting on this subject, I wrote this song.
397 எத்தனை இன்பம்
இழந்ததை பெறுவது
எத்தனை இன்பம்
இழந்து பின் பெற்றாலே
இதுவுமே புரியும்
பசித்தபின் புசித்தால்
சுவையும் புரியும்
பசிக்காத பேருக்கு
இதுஎங்கே புரியும்
இழந்தது எதுவென
எப்படிச் சொல்ல
இழக்காமல் வாழ்வது
நடைமுறை யல்ல
பொருளின் இழப்பும்
புதிதான தல்ல
புவிவாழ்வில் நிலைப்பது
பொன்பொருள் அல்ல
காலமும் நேரமும்
கண்மூடி ஓடும்
பிறந்தபின் வயதுமே
நிலைக்காது ஓடும்
தேகமும் தளர்ந்து
முதுமை அடையும்
தேடிய சுகங்கள்
ஓடியே மறையும்
இவையெல்லாம் இழப்பது
இயல்பான ஒன்று
இழக்காமல் வாழ்வது
கிடைக்காத ஒன்று
ஆயினும் உறவென
வந்திடும் போது
அதனை இழப்பது
முடியாத ஒன்று
வெறுத்தாலும் மறுத்தாலும்
போகாது உறவு
நாமாக வேண்டாமல்
கிடைத்திட்ட ஒன்று
பிறப்பிலே கிடைத்தது
மறைவிலும் தொடரும்
விரும்பாது போனாலும்
நம்மோடு வளரும்
அதனை இழப்பது
மாபெரும் துயரம்
ஆயினும் பலமுறை
இழப்புமே நிகழும்
இழக்கும் போதுதான்
அதன்வலி புரியும்
மீண்டும் கிடைக்க
அதனின்பம் புரியும்
மத்திகிரி, 4-1-2018, மதியம் 1.50