402 Longing loneliness
My heart is longing for
Some kind of calmness
And the mind also
Urges me to live a life of recluse
And the heart hesitates
To struggle with others
Who come in between?
And leaves in the middle
Though we born with others
And live with others
Some kind of loneliness is
Common for all
Who is longing
For which
Clearly will show
Each person’s need
When stand amidst
In a crowd
The heart will always
Long to be alone
When the right
Opportunity comes
It will run and
Keep away from others.
Reducing the talking
And stopping lamenting
It will seek deep within
That peace
When it is available
In whichever form
It will drown in it
And rejoice
Mathigiri, 14-1-18, 11.10 pm.
I don’t know whether it is my temperament or longing or mere imagination. I am a chattering box, though I long to have a life of recluse. Of course I don’t go much outside and never interact with many people, but as I read and think a lot I constantly feel that I engage with many people. And when I sit quietly before retiring to bed, the few seconds that I try to spend to remain calm gives some kind of immense bliss and I always want to have this kind of life where I can go back into my own world and live there silently. As I enjoyed this blissful moments for few seconds, I wrote this song expressing that longing.
402 தனிமையைத் தேடி
ஒருவித அமைதியை
உள்ளமும் தேடுது
ஒதுங்கியே வாழ்ந்திட
மனதுமே தூண்டுது
இடையிலே வந்து
இடையிலே போகும்
பிறரோடு போராட
மனதுமே தயங்குது
பிறரோடு பிறந்தும்
பலரோடு வாழ்ந்தும்
ஒருவிதத் தனிமை
அனைவருக்கும் உண்டு
எவரெதை நாடுறார்
என்பதில் இருந்து
அவரவர் தேவை
தெளிவாகத் தோன்றும்
கூட்டத்தின் மத்தியில்
கூடியே நின்றால்
நாட்டமெல்லாம் மனதில்
தனிமையை நோக்கும்
ஏற்ற நேரமும்
வருகின்றபோது
ஓட்டமாய் ஓடி
ஒதுங்கியே கொள்ளும்
பேச்சினைக் குறைத்து
புலம்பலைத் தவிர்த்து
ஆழ்ந்த மனதினுள்
அமைதியைத் தேடும்
எப்போது எவ்விதம்
அது கிடைத்தாலும்
அதனுள்ளே மூழ்கி
ஆனந்தம் கொள்ளும்
மத்திகிரி, 14-1-18, இரவு 11.10