425 Talk
We should live
Keeping in silence
And should talk
With measure
Once we pour down words
Unnecessarily
Suffering will come
Automatically after that
We should think
Before we talk
If we talk unnecessarily
Later we have to regret
We cannot recall
The words which we uttered
There is no point of saying
I said it in anger
Though there is no
Price attached to our words
Once we talked
We need to pay a price for them
There is no point of
Regretting latter
There is no hope of changing
Once we talked
Even after learning one time
If we are not repent
Then in the life
We will remain pounded
Thinking what others said
Who underwent such experience?
We too should live
Properly in life
Mathigiri, 16-3-18, 11.30௦ pm.
We often hear people saying that they never keep anything in their heart and openly and directly talk or confront others. There are people like this. But in the name of open talk, several times we say certain words which remain irrelevant in that particular context. There is no point of saying that we said it out of emotion. True when we are carried by emotion than reason, we say many words for which we have to pay a heavy price later. That is why Valluvar clearly said:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு—குரல் 127
Whatev’er they fail to guard, o’ver lips men guard should keep. If not, through fault of tongue, they bitter tears shall weep.
Explanation: Whatever besides leave unguarded, guard your tongue. Otherwise errors of speech and the consequent misery will ensure.—Kural 127
425 பேச்சு
வாய்மூடி மவுனியாய்
வாழ்ந்திட வேண்டும்
வார்த்தைகள் அளவோடு
பேசிட வேண்டும்
வீணாக வார்த்தையை
கொட்டிய பின்னே
வேதனை வந்திடும்
தன்போல முன்னே
சொல்லிடும் முன்னே
யோசிக்க வேண்டும்
வீணாகப் பேசிட
வருந்திட வேண்டும்
கொட்டிய சொற்களை
அள்ளிட முடியாது
கோபத்தில் கொட்டினேன்
எனச்சொல்ல ஆகாது
சொலுக்கு விலையேதும்
இல்லாத போதும்
சொன்னபின் விலைஒன்று
தந்திட வேண்டும்
பின்னாலே வருந்தியே
பயனேதும் இல்லை
பேச்சினை மாற்றிட
வழியேதும் இல்லை
ஒருமுறை பட்டுமே
திருந்தாது போனால்
இடிபட்டுக் கிடக்கணும்
வாழ்விலே வீணாய்
பட்டவர் பலமுறை
சொன்னதை எண்ணி
புத்தியாய் நாமுமே
வாழணும் நன்றாய்
மத்திகிரி, 16-3-18, இரவு 11.30௦