443 Final straw
When the last
Straw is placed on top
Even the back of the camel
Will be broken
When we give
The final blow
Even a hard
Stone will crack
When the ants
Go continuously
Even a hard rock
Also will get diminished
When we move
Too closely
Some kind of
Frustration will come in it
The green
In distance alone
Will look
Cool to the eyes
These are the
Truth which
Others told
Based on their experience
Taking them
As lesson for us
We too should
Live accordingly
As we live
Too closely
Due to familiarity
We might go away
Before we
Learn by experience
We should live
Understanding this well
Mathigiri, 9-5-18, 11.00 p.m.
Another song reflecting on the golden concept of: familiarity breeds contempt.
443 இறுதி துரும்பு
இறுதி துரும்பு
எடுத்து வைக்க
ஒட்டக முதுகும்
ஒடிந்து போகும்
கடைசி அடியை
கொடுத்து முடிக்க
கல்லும் கூட
பிளந்து கொடுக்கும்
சிறுக சிறுக
எறும்பும் ஊற
பறை கூட
தேய்ந்தே போகும்
அதிகம் நெருங்கி
பழகிப் பார்க்க
அதிலும் சற்று
அலுப்புத் தோன்றும்
தூர இருக்கும்
பச்சை மட்டும்
இதமாய் இருக்கும்
கண்களுக்கும்
இவை எல்லாமே
அனுபவத்தில்
கண்டவர் சொன்ன
உண்மையாகும்
அவற்றை நமக்குப்
பாடமாக்கி
அதற்கு ஏற்ப்ப
வாழவேண்டும்
அதிகம் உரசி
வாழ்வதாலே
சூடும் ஏறி
விலகக் கூடும்
அனுபவத்தில்
அறியும் முன்னே
புரிந்து கொண்டு
பழக வேண்டும்
மத்திகிரி, 9-5-18, இரவு 11.00.௦௦