Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 454

$
0
0

454 Pleasant sorrows

 

Sorrow is also

Pleasant one

When we understand

It properly

 

If we need

Happiness

Without sorrow

What else is there to give?

Where one can

Find a good teacher

Other than sorrow

To teach us properly

 

It alone has

The strength

To imprint deeply

In our mind

 

It will change

Even a fool as a wise man

It will help us to

Understand life completely

 

It will point out

Which one is true and which one is false

And standing as our shadow

It will teach us

 

The loneliness

That it provides is important one

There alone we will

Understand the truth properly

 

Unlike the pleasure

Which disappears suddenly?

Remaining for long time

It will do many good things

 

There alone

Patience will begin

It will also add

Strength in our heart

 

Accompanying like a

True friend

It will help us to understand

Those who are around us

 

Once we enjoyed

All these benefits in sorrow

There is no more

Burden in it

 

Mathigiri, 22-6-2018, 11.40 p.m.

 

There is a Hindi proverb: kabi gam; kabi kushi = there is sorrow sometime; some time happiness.  But we understand life properly through sorrow than when we learn through happiness.  Once we understand so many benefits which sorrow brings in our life, then we won’t consider it as a burden when it comes.

 

454 சுகமான சோகம்

 

சோகமும் கூட

சுகமான ஒன்று

சோகத்தை சரியாய்

உணர்ந்திடும் போது

 

சுகமென்ற ஒன்று

இருந்திட வேண்டின்

சோகமின்றி வேறு

மாற்றெது உண்டு

 

சோகத்தைப் போல

சொல்லியேத் தந்திட

சிறந்த ஆசான்

வேறெவர் உண்டு

 

ஆழமாய் மனதில்

பதியவைக்க

அதற்கு மட்டுமே

வலிமையையும் உண்டு

 

மூடனைக் கூட

ஞானியாய் மாற்றும்

முழுமையாய் வாழ்வை

புரியவைக்கும்

 

நிழலெது நிஜமெது

என்பதைக் காட்டும்

நிழலாய் நின்று

சொல்லி கொடுக்கும்

 

அதுதரும் தனிமை

அவசியம் ஒன்று

அங்குதான் அறிவோம்

உண்மையை நன்று

 

சட்டென மறையும்

சுகம்போலவன்றி

நீடித்து நின்று

நன்மைகள் செய்யும்

 

அங்குதான் பொறுமை

ஆரம்பம் ஆகும்

அத்துடன் மனதில்

வலிமையைச் சேர்க்கும்

 

உற்ற நண்பனாய்

கூடவே வந்து

சுற்றி உள்ளோரை

புரியவும் வைக்கும்

 

சோகத்தில் உள்ள

இத்தனை சுகத்தை

சுகித்தபின் சோகம்

பாரமே இல்லை

 

மத்திகிரி, 22-6-2018,  இரவு, 11.40


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles