Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 457

$
0
0

457 Both are essential

 

Joy and sorrow

Will remain mingled in life

Progress and fall

Will remain together in life

 

Praising and despising

Will never get separated

Clarity and confusion

Always stand together

 

Life is a mix of

Two opposites

Living without them

Is artificial indeed

 

When cold and heat

Join together

How can we compare

The pleasure that it gives

 

The rest that we get

After lot of toil

Where is the true

Pleasure like it

 

Where one can find

The real contentment

Like the remuneration

That we receive for our hard labour

 

Like the salt

Which add taste to food?

Life too needs

Two opposites

 

When we have

A heart to accept them both

Both will become joy full

To give happiness to life

 

Mathigiri, 19-7-2018, 10.30 p.m.

 

In order to make the positive things more valuable and enjoyable there should be negative things opposite to every positive value in life.  Without the one life will become monotonous.  Once we have a heart to accept them both with tranquility then life will become joyful.

 

457 இரண்டும் தேவை

 

இன்பமும் துன்பமும்

இணைந்ததுதான் இருக்கும்

ஏற்றமும் தாழ்வும்

சேர்ந்துதான் இருக்கும்

 

போற்றலும் தூற்றலும்

பிரியாது இருக்கும்

புரிதலும் குழப்பமும்

ஒன்றாக இருக்கும்

 

எதிரெதிர் காரியம்

இணைந்ததே வாழ்க்கை

இவையின்றி வாழ்வது

உண்மையில் செயற்கை

 

குளிரும் நெருப்பும்

கூடிடும் போது

கிடைக்கும் இன்பம்

அதற்கிணை ஏது

 

சோர்வுக்குப் பின்னே

கிடைத்திடும் ஒய்வு

அதுபோல் உண்மை

சுகமொன்று ஏது

 

உழைப்பில் கிடைக்கும்

ஊதியம் போன்று

உண்மையில் நிறைவு

வேறெங்கு ஏது

 

உணவுக்கு சுவைதரும்

உப்பையும் போல

எதிரெதிர் காரியம்

வாழ்க்கையில் தேவை

 

இரண்டையும் ஏற்கும்

மனமுமே இருக்க

இரண்டுமே சுவைக்கும்

மகிழ்வாக இருக்க

 

மத்திகிரி, 19-7-2018, இரவு, 10.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles