470 Poems
Both the first and
Last words properly come
Adding apt words
In between them
Communicating
The thought through words
I wrote something
As poem
Compiling the
Feelings of the heart
Creating proper
Illustration for that
Refining it
Through imagination
I wrote something
As poem
In order to
Communicate a thought
Selecting
A proper one
Adding proper
Words for that
I presented
A poem here
As the words
Which come first
Inspires to write
More and more
Next words
Will stand in line
Inducing me
To write more and more
When I was
About to close the poem
As the words stand
With much hesitation
Again the first and
The lost words coming properly
Will help me
To close the poem
As my heart
Refuses to go
Further
Beyond that
As the words also
Stop flowing
I will complete
The poem finally
Mathigiri, 30-8-2018, 11.30 p.m.
This song shows how and why I write poems. Unless inspiration comes in which the words also fall in line to be used coming automatically one cannot write poems artificially. At the same time, when the flow of words stops, however one tries she cannot write more.
470 கவிதை
எதுகை மோனை
நன்றாய் அமைத்து
இடையில் ஏற்ற
வார்த்தைகள் சேர்த்து
எழுத்தில் மனதின்
கருத்தை வடித்து
எழுதினேன் எதையோ
கவிதை என்று
உள்ளத்தில் தோன்றும்
உணர்வைத் தொகுத்து
உவமைகள் அதற்கு
சரியாய் அமைத்து
கற்பனை மூலம்
மெருகும் சேர்த்து
கவிதை என்று
எழுதி வைத்தேன்
கருத்து ஒன்றை
சொல்ல வேண்டி
பொருத்தமான
ஒன்றை எடுத்து
தகுதியான
சொற்கள் சேர்த்து
தந்து விட்டேன்
கவிதை என்று
முதலில் தோன்றும்
வார்த்தை ஒன்று
மேலும் மேலும்
எழுதத் தூண்ட
வரிசை கட்டி
அடுத்த சொற்கள்
வந்து சேரும்
எழுத வென்று
இறுதியாக அதை
முடிக்கும் போது
வந்த சொற்கள்
தயங்கி நிற்க
எதுகை மோனை
மீண்டும் வந்து
எழுதி முடிக்க
கையும் கொடுக்கும்
அதற்கு மேலே
தொடர்ந்து செல்ல
மனதும் கூட
மறுப்பு சொல்ல
எழுத்துக்களும்
ஓய்ந்து போக
முடித்து வைப்பேன்
கவிதை தன்னை
மத்திகிரி, 30-8-2018, இரவு, 11.30