1154 Again I will come back
You helped me
To live this day’s life
You fulfilled
All my needs
I get ready
For tomorrow’s life
I came to you
Asking about it
That time
You smiled and told
‘Let us talk about it
Tomorrow’.
‘It is better
If you could tell in advance.
I can get ready
Accordingly’ I responded
When you asked
‘What kind of preparations’
In response I told
‘In every way’!
On listening it
You laughed very loudly
You also teased me by saying
‘Is it so’?
‘I told about it
Yesterday itself
But you alone
Forgot it
However you
Were preparing
Who holds the result?
Better tell that to me!
I called you
Only to live one day at a time
So far I am leading your life
Accordingly
Rest of the night
Is there for you to spent
Why did you forgot
Only tell that to me
Think about the way
You struggle to catch your sleep
Once you completed it (sleep)
Then come and ask’
Without responding further
I silently went to bed
Rest I will say
If I woke up from my sleep
If I am gone
In my sleep itself I will thank for that
If I come back again to live
I will continue to write like this
Mathigiri, 12-12-2019, 11.10
I always plan my next day before I go to bed. Sometimes plan even for day after tomorrow. This I inherited from my father. If he has to go out for his work, he will pack his things and keep it ready one week before and will keep his bag in the veranda two days before. My mother used to tease him by saying, ‘go and sit in the railway station two days before’. Particularly what to cook and when to do the sweeping, moping and washing clothes etc. So when I thanked the Lord for a wonderful day, remembering my mother’s rebuke to my father, I also teased the Lord better tell me what is his plan for me for tomorrow. And as my imagination soared high I wrote this song of dialogue between me and the Lord.
1154 மறுபடியும் வருவேன்
இந்நாள் வாழ்வையும்
வாழ்ந்திட வைத்தாய்
என்தேவை எல்லாம்
நிறைவேற்றித் தந்தாய்
அடுத்தநாள் வாழ்வுக்கு
ஆயத்தம் ஆனேன்
அதுபற்றி உன்னிடம்
கேட்டிட வந்தேன்
அந்நேரம் உதட்டோரம்
புன்னகை செய்தாய்
அதுபற்றி நாளைக்கு
பேசலாம் என்றாய்
முன்பாக சொன்னால்
நல்லது என்றேன்
அதற்கேற்ப ஆயத்தம்
செய்யலாம் என்றேன்
எவ்விதம் ஆயத்தம்
என்றுநீ கேட்க
எல்லா வகையிலும்
என்றுமே சொன்னேன்
அதுக்கேட்டு மீண்டும்
பலமாக சிரித்தாய்
அப்படியா என்று
கேலியும் செய்தாய்
நேற்றே அதுபற்றி
நான் சொல்லிவிட்டேன்
நீதான் அதனை
மறந்துமே விட்டாய்
என்னதான் ஆயத்தம்
நீசெய்த போதும்
முடிவு யாரிடம்
என்பதைச் சொல்வாய்
அன்றாடம் வாழ்வே
நான்னுன்னை அழைத்தேன்
அதன்படி இதுவரை
நானுமே நடத்தினேன்
எஞ்சிய இரவும்
மிச்சமாய் உளது
அதனைநீ மறந்தது
ஏனெனச் சொல்லு
தூங்கநீ போராடும்
போராட்டம் எண்ணிடு
அதனை முடித்தபின்
நீவந்து கேளு
பதிலேதும் பேசாமல்
படுக்கைக்குப் போகிறேன்
தூங்கியே எழுந்தால்
மற்றதைச் சொல்கிறேன்
தூக்கத்திலே போலானல்
நன்றியும் சொல்லுவேன்
மீண்டுமே வாழ்ந்தால்
இதுபோல எழுதுவேன்
மத்திகிரி, 12-12-2019, 11.10