1156 Better you decide
Unless I know
About your decision
I cannot do
Anything in life
The reason
For me to become upset
Is only this
Better you understand it
If you allow me
To go as I wish
Thinking that
Let me tell it at the end
I am not alone
Responsible for
The end result
Better you realize this also
It is not
Easy for us to do
Anything in life
Only after knowing the complete result
It is not good
On your part
To keep a bhakta
To accept any result at the end
There is no choice
For your deny
Our right to demand
A choice of our own result
(You alone ask us to knock, seek and ask)
Nothing wrong
To give some kind of clue
For us to act
Accordingly
I only ask
Only for that clue
And I will do
Things accordingly
I will accept in the end
Whatever might be result?
Because of that
As your own
Realizing that
How to give that clue
For me
Is not my responsibility
Somehow you should
Give that to me
And lead me
Accordingly
Therefore for me
To arrive to any conclusion
Is left with
Your decision
Better you take
That decision quickly
And give space for me
To act accordingly
Mathigiri, 17-12-2019, 11.00 p.m.
We cannot do anything in life knowing all the consequence of our choice. At the same time without having some kind of result in our mind it is impossible for us to do anything in life. But we should know the mind of god before we do anything. But without some kind of clue about what we need to do from him we cannot even begin. Demanding the choice of the result is our right which god cannot deny to a bhakta. So how to give that clue is left to him. Unless he gives that clue we cannot do anything in life. And my plea to him is to take a final decision about giving that clue to me for me to begin certain thing in life than blaming what went wrong in the end. Better god also to understand that we have the right to choose but the consequence of our choice which is left not in the hands of our own as he is equally responsible for that in the life of a bhakta.
1156 முடிவுக்கு வா
நீகொண்ட முடிவினை
அறிந்திடும் வரையில்
நானெந்த முடிவுக்கும்
வந்திட இயலாது
நான்கொண்ட பிணக்கிற்கு
இதுவே காரணம்
அதைநீ அவசியம்
உணர்ந்திட வேண்டும்
இறுதியில் சொல்லலாம்
என்றுமே எண்ணி
என்வழி நீயும்
போகவும் விட்டால்
அதனால் ஏற்படும்
எவ்வித விளைவுக்கும்
நான்மட்டும் பொறுப்பல்ல
என்பதை உணறு
முழுதாய் விளைவை
தெரிந்த பின்னே
செயல்களைச் செய்வது
எளிதல்ல எமக்கு
எது வந்தாலும்
ஏற்றிடும் நிலையில்
பக்தனை வைப்பது
அழகில்லை உனக்கு
விரும்பிடும் விளைவை
வேண்டி வந்திடும்
உரிமையை மறுக்க
வழியில்லை உனக்கு
அதன்படி காரியம்
செய்திட வேண்டின்
குறிப்பினைத் தருவதில்
தவேறேதும் இல்லை
அந்த குறிப்பினை
மட்டுமே கேட்டேன்
அதன்படி நானும்
செயல்களைச் செய்வேன்
அதன்படி அமையும்
எவ்வித விளைவும்
உனதே என்று
இறுதியில் ஏற்பேன்
எவ்விதம் குறிப்பைத்
தருவது என்பது
எனது பொறுப்பல்ல
என்பதை உணர்ந்து
எவ்வித மேனும்
நீ தரவேண்டும்
அதன்வழி என்னை
நடத்திட்ட வேண்டும்
ஆகவே நானொரு
முடிவுக்கு வருவது
நீகொண்ட முடிவில்
மட்டுமே உள்ளது
அந்த முடிவினை
நீயுமே எடுத்து
காரியம் தொடங்க
வழிவிட வேண்டும்
மத்திகிரி, 17-12-2019, இரவு, 11.00