532 A slip between the cup and the lips
However the food
Reached on our hand
Finally it
Does not go in our mouth
Like this many things
Will happen in our life
But only we are
Not ready to accept them
All that we thought
Are permanent
Will go one day
From our hands
Though we understood
This truth well
Only we lack the heart
To accept it
We should know that
In this unstable world
There is nothing
That will remain permanently
Accepting that
Whichever life we got
We should
Accept that peacefully
Living that life
In everyday life
We should see
Satisfaction in it
Not lamenting
That went in the past
And not troubled
Thinking which might come
When we learn
To live each day as it comes
Food that reached on our hand
Will also go in our mouth
Mathigiri, 3-1-2020, 11.00 p.m.
One young man arranged a victory procession to welcome his father as he won in the recently held Paychayat (local body) elections in his area ward. Due to over excitement as he was dancing with much vigour he collapsed in the procession and died on the spot because of heart attack. In another place one candidate who won the election unable to accept his victory died next day. When such news came I felt very sorry for them. Then I told the Tamil proverb: கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டல which is equal lent to the English saying: There is a slip between the cup and lips. This night when I was thinking about them, I wrote this song.
532 கைக்கு எட்டியது
என்னதான் கைக்கு
எட்டிய போதும்
இறுதியில் வாய்க்குள்
போகத்தான் காணோம்
இதுபோல் வாழ்வில்
நடந்திடும் பலவும்
ஆயினும் நாமதை
ஏற்கத்தான் காணோம்
நிரந்தரம் என்றுமே
நினத்திட்ட எதுவும்
ஒருநாள் கைவிட்டு
சென்றுதான் தீரும்
இந்த உண்மை
புரிந்திட்ட போதும்
ஏற்கின்ற மனதுதான்
வந்திடக் காணோம்
நிலையில்லா உலகில்
நிரந்தரம் என்று
ஏதுமே இல்லை
புரிந்திட வேண்டும்
அதனை ஏற்று
அமைந்திடும் வாழ்வை
அமைதியாக நாம்
ஏற்றிட வேண்டும்
அந்த வாழ்வை
அனுதினம் வாழ்ந்து
அதனுள் நிறைவை
கண்டிட வேண்டும்
போனதை எண்ணி
புலம்பி விடாமல்
வருவதை எண்ணி
கலங்கி விடாமல்
அனுதின வாழப்
பழகிட்டும் போது
கைக்குள் வந்தது
வாய்க்குள் போகும்
மத்திகிரி, 3-1-2020, இரவு, 11.00