1172 Grace which upholds
When your grace upholds me
Where is the place for worries?
When your compassion increases more and more
Why should I get troubled?
Nowhere is a life
Without confusion and trouble
But before your grace
There is no place for them
When one depends on her own
Even small worry will trouble her
Without any means to overcome it
The heart also will get confused
Realizing that
When one reaches back to your feet
As clarity comes in the mind
It will even remove a mountain
Though I too
Experienced the same many times
As the emotion came and push
It makes me to forget your grace
But when your grace
Reminds me seeking after me
As I come again to worship your feet
Your grace will uphold me again
Mathigiri, 12-2-2020, 10.30 p.m.
The fragile nature of our mind will often make us to forget the grace of god which sustains us all the time. When we give too much space for emotion, then it will make even a small trouble to disturb us more. But when we remember the way the grace of god sustained in the past, it will help us to overcome the present situation easily, provided we again seek the same grace from him.
1172 தாங்கும் கிருபை
கிருபை வந்து தாங்கும் போது
கவலைக்கிங்கு இடமும் ஏது
கருணை மேலும் பெருகும் போது
கலக்கம் அடையத் தேவை ஏது
கவலை, குழப்பம் இரண்டுமற்ற
வாழ்வு ஒன்று எங்கும் இல்லை
ஆனால் உனது அருளின் முன்னே
அவற்றுக்கிங்கு இடமே இல்லை
தன்னைத் தானே சாரும் போது
சிறிய துயறும் கலங்க வைக்கும்
மீள அதிலே வழியும் இன்றி
மனதும் கூட குழம்பித் தவிக்கும்
அதனை உணர்ந்து மீண்டும் உனது
திருவடியை அண்டும் போது
சிந்தையிலே தெளிவு தோன்ற
மலையைக் கூட பெயர்த்து வைக்கும்
பலமுறை இதையே நானும்
பலவிதத்தில் உணர்ந்த போதும்
உணர்ச்சி வந்து உந்தித் தள்ள
உனது அருளை மறக்க வைக்கும்
ஆனால் உனது அருளும் கூட
தேடி வந்து நினைவு படுத்த
மீண்டும் வந்து தாளைப் பணிய
கிருபை என்றும் தாங்கிக் காக்கும்
மத்திகிரி, 12-2-2020, இரவு, 10.30