548 Everything will go well
I wandered searching for it
But I never obtained
Those who got it
Never declared it to me
I went after seeking it
But I never attained it
Those who attained
Never showed it to me
Somehow to
To learn about it
I just looked
Their life
Taking pity on me
They try to share it
They searched
Proper words
But I cannot understand
What they shared
But there is no point
In accusing them
They shared about what they received
In their own way
But I alone cannot understand
Who listened to them?
How many philosophies (about life)
How many illustrations (to explain it)
Along with added
The result of their research
They insisted that
Their experience is true
Those who refuse to accept
Alone are not correct
I ran away from them
In order to escape (from them)
I realized that
It is unnecessary endeavor to search for it
I realized that
I alone is the fool
Who tried to catch the flying bird?
Not holding which is on my hand
When I began to live
The life which I live normally
Everything that I searched for
Will come automatically
When I handle
Which I already attained
That which I seek
Will be come on its own
Giving up
Asking others (about it)
Not try to live
Imitating others
When I began to live
My life for me
Everything will
Go properly
Mathigiri, 20-5-2020, 11.45 p.m.
Though we cannot live without others, until we learn to live our life for us, there is no use of try to lean from others to imitate them.
548 சரியாக நடக்கும்
தேடித்தான் அலைந்தேன்
கிடைக்கவே இல்லை
கிடைத்தவர் எனக்கத்தை
சொல்லவும் இல்லை
நாடித்தான் ஓடினேன்
பெற்றிட வில்லை
பெற்றவர் பெற்றத்தைக்
காட்டவும் இல்லை
எட்டிதான் பார்த்தேன்
அவரது வாழ்வை
எப்படியேனும் அதை
அறிந்து கொள்ள
என்னிலைக் கிறங்கி
சொல்லிட்ட முயன்றார்
ஏற்ற வார்த்தைகள்
தேடியே சொன்னார்
அவர்சொன்ன ஏதும்
புரியவே இல்லை
அவர்மீது குற்றம்
ஏதுமே இல்லை
தான்பெற்று வாழ்வதை
தன்போக்கில் சொன்னார்
கேட்ட எனக்குத்தான்
விளங்கவே இல்லை
எத்தனைத் தத்துவம்
எத்தனை உவமைகள்
அத்துடன் அவரின்
ஆய்வின் முடிவுகள்
தான்பெற்ற அனுபவம்
சரியெனச் சொன்னார்
அதனை மறுப்பவர்
சரியில்லை என்றார்
விட்டால் போதும்
என்றுமே ஓடினேன்
வேண்டாத வேலை
தேடுதல் என்றேன்
இருப்பதை விட்டு
பறப்பததைப் பிடிக்கும்
ஏமாளி நானானேன்
புரிந்துமே கொண்டேன்
வாழ்ந்திடும் வாழ்வை
இயல்பாக வாழ
வந்திடும் தன்போல்
தேடிய எதுவும்
பெற்றதை முறையாய்
கையாளும் போது
நாடிய ஒன்றும்
தன்போல் கிடைக்கும்
பிறரிடம் சென்று
கேட்பதை விட்டு
பிறரைப் பார்த்து
வாழ்வதை விட்டு
எனக்கென வாழ்வை
வாழ்ந்திடும் போது
எல்லாம் இங்கே
சரியாக நடக்கும்
மத்திகிரி, 20-5-2020, இரவு 11.45