1214 I asked for the reason
Having some
Proper reasons
You will
Do things (in my life)
However I
Try my best
You will refuse
To share with me
Thinking that
If I know that
As my burden will increase
As you hide it from me
Still as my
Curiosity increases more
As I search
Means to know that
In order to
Teach me a lesson
As you began
To reveal it to me
When I try to
Run to escape
Thinking that
Why I try to knew it
Stopping me you said:
‘Once you knew that
There is no means
For you to escape’
As I know
Your mind
When I took
Refuge in you
Explaining both
Reason and action
You encouraged me
As I was much troubled
Thinking that
Enough I learnt
Immediately I
Came to one decision
Whatever reason
That you might have
I won’t ask
The reason for it
Knowing that
As you have
Only my welfare
I bowed at your feet
Mathigiri, 9-7-2020, 11.15 p.m.
Better not ask the Lord all the reasons for his decision for our life. If he reveals them, the burden will increase. Sometimes not knowing the will of the Lord is better trusting him accepting anything that comes in life. As everything works only for good in our life, trusting the Lord and living the life as it comes is better than searching for reasons and will of god for many things in our life.
1214 காரணம் கேட்கேன்
காரணம் ஒன்று
நீயுமே கொண்டு
காரியம் தன்னை
நடத்தியே வைப்பாய்
எவ்வித முயற்சி
நானுமே செய்யினும்
எனக்கதை நீயுமே
சொல்லிட மறுப்பாய்
நானதை அறிந்தால்
பாரமேப் பெருகும்
என்றுமே எண்ணி
நீயதை மறைக்க
ஆயினும் ஆர்வம்
மேலுமேப் பெருக
நானதை அறியும்
வழியினைத் தேட
ஆகவே எனக்கொரு
பாடமும் கற்பிக்க
நீயதை எனக்கு
விண்டுமே வைக்க
ஏனதை அறிந்தோம்
என்றுமே எண்ணி
தப்பிக்க முயன்று
நானுமே ஓட
அறிந்தபின் தப்பிக்க
வழி உனக்கில்லை
என்றுமே சொல்லி
நீயுமே தடுக்க
உன்னுள்ளம் அதனை
அறிந்திட்ட நானும்
உன்னிடம் மீண்டும்
சரணென அடைய
காரண காரியம்
இரண்டையும் விளக்கி
கலங்கிய என்னை
தேற்றிட வைத்தாய்
பட்டது போதும்
என்றுமே எண்ணி
சட்டென நானொரு
முடிவுக்கு வந்தேன்
எவ்விதக் காரணம்
நீயுமே கொள்ளினும்
என்ன ஏனென
நானுமே கேட்கேன்
என்நலம் ஒன்றே
உனக்குமே உள்ளது
என்பதை உணர்ந்து
உன்னடிப் பணிந்தேன்
மத்திகிரி, 9-7-2020, இரவு, 11.15