Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakthi Theology Song 1234

$
0
0

1234 Where else to go?

 

You will accomplish

That which is unpredictable

You will do it

As you planned it

You will prepare me

For that well

You will arrange my life

Accordingly

 

When I depend

Upon you completely

Where I have any

Separate personal desire

Whatever you might do

As it is acceptable to me

What is the use of?

Asking me (about it)

 

This does not come

As mere words of formality

There is no place

For vainly praising you

Before my thought

Comes to you

As you know well in advance

There is no place to hide from you

 

But there is no

Hope in me

The reason for that

Is not unknown to me

Though I come to you

As an innocent person

My deceitfulness is

Not gone completely

 

Though I do mistakes

As you are there to rescue me

Oh my God

What else can I say to you?

The one who knows

My inner thought

I took total surrender to you

Where else can I go?

 

Mathigiri, 2-9-2020, 11.30 p.m.

 

Several times in my life all that I imagined or planned about my life never materialized.  Though god has arranged my life as per his plan, still he prepares me for that well before implementing it. Though I confess that I surrendered my life to his will, still the deceitful heart often deceives. But my only consolation that I have is that, in spite of my deceitful heart, somehow in my spirit I have surrendered my will to the will of god. And as he knows my thought well, though my hearts deceives me, still as he always stands with me to forgive and restore back, I find solace when I took refuge at His feet.

 

1234 வேறெங்கு செல்ல

 

நினைக்காத ஒன்றை

நீயுமே நடத்துவாய்

நினையாத படியே

நடத்தியேக் காட்டுவாய்

அதற்காக என்னையும்

ஆயத்தம் செய்குவாய்

அதன்படி வாழ்வையும்

அமைத்துமேக் கொடுப்பாய்

 

முழுமையாய் உன்னையே

சார்ந்திடும் போது

எனக்கெனத் தனியான

விருப்பமும் ஏது

எதைநீ செய்யினும்

சம்மதம் என்றபின்

என்னிடம் கேட்டு

பயனேது கூறு

 

உபச்சார வார்த்தையாய்

இதுவுமே வரவில்லை

வீணான புகழ்ச்சிக்கு

உன்னிடம் வழியில்லை

உள்ளத்தில் எண்ணமும்

வந்திடும் முன்னமே

உணர்ந்த உன்னிடம்

மறைத்திட இடமில்லை

 

ஆயினும் என்மீது

நம்பிக்கை எனக்கில்லை

அதற்கான காரணம்

புரியாமல் எனக்கில்லை

வெளந்தியாக நான்

உன்னிடம் வந்தாலும்

கள்ளத்தனம் மட்டும்

முற்றாக நீங்கலை

 

பிழைக்க நின்றாலும்

பேணியே காக்கின்ற

பெம்மான் உன்னிடம்

வேறென்ன சொல்ல

நெஞ்சின் நினைவினை

அறிந்த உன்னிடம்

தஞ்சம் அடைந்தேன்

வேறெங்கு நான்செல்ல

 

மத்திகிரி, 2-9-2020, இரவு, 11.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles