Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1237

$
0
0

1237 Contentment

 

You accomplished

The reason for my birth

You helped me to understand

The purpose of life

You helped me to

Realize you

You made me

To sing your praises always

 

I thank you

With the fullness of my heart

I do bhakti

With overflowing love

I write poems

Rejoicing in my heart

I kept

Unwavering love in you

 

Some kind of

Contentment came in my heart

Your grace helped

For that

How many shortcomings

That I might have

Your love has

Completely forgot them

 

Even a single day life

Has not gone in vain

There is not a single day

In which I forgot you

Your graceful sight

That began from the womb

Till the end

Has never gone away from me

 

This is enough

What else I need

The life should go

Only like this

Nothing should come

Between you and me

That might separate you and me

You alone should protect me

 

Mathigiri, 15-9-2020, 11.00 p.m.

 

Though there are several ‘Disappointments with God’, still when I see my life there is some kind of satisfaction and contentment because of the grace of God.  He helped me to achieve the purpose of this life and helped me to understand his grace, allowed me to abide in him and spend each day remembering him.  What else I bhakta needs in her life more than this?  And my only request to the Lord is that he alone should guard me not allowing anything to separate me from his love.

 

1237 நிறைவு

 

வந்தத்தின் நோக்கம்

நிறைவேற்றி வைத்தாய்

வாழ்வதின் நோக்கம்

புரிந்திட வைத்தாய்

என்னையும் உன்னை

அறிந்திட வைத்தாய்

என்றும் உன்புகழ்

பாடிட வைத்தாய்

 

நெஞ்சம் நிறைய

நன்றியும் சொன்னேன்‌

நேசம் பெருக

பக்தியும் செய்தேன்

மனதும் மகிழ

பாடலும் புனைந்தேன்

மாறாத அன்பு

உன்மீது வைத்தேன்

 

ஒருவித நிறைவு

உள்ளத்தில் வந்தது

உன்னருள் அதற்கு

துணையாக நின்றது

எத்தனைக் குறைகள்

என்னிடம் இருந்தும்

உன்னன்பு அவற்றை

மறந்தே விட்டது

 

ஒருநாள் வாழ்வும்

வீணாக வில்லை

உன்னை நினைக்காத

நாளே இல்லை

கருவினில் தொடங்கிய

உன்னருள் பார்வை

கடைசி மட்டும்

நீங்கவே இல்லை

 

இதுபோதும் எனக்கு

வேறென்ன வேண்டும்

இதுபோல் வாழ்வு

நகர்ந்திட வேண்டும்

என்னையும் உன்னையும்

பிரித்திடும் எதுவும்

என்வாழ்வில் வராமல்

காத்திட்ட வேண்டும்

 

மத்திகிரி, 15-9-2020, இரவு, 11.00


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles