1248 Standing beyond limits
Whatever you teach
Through anyone
I only listen
Only your voice in them
When you give the message
Through any means
I only hear
Only your voice in it
The teachings
Of your Veda
Given by any other scripture
All are same to me
As you stand
Beyond the limitation of Scriptures
All of them are
Only your voice
Once I came to know you
Only through your Veda
I only see them
Only through your Spirit
I see all the
Blessings in this world
Only as your
Boon alone
All the words
That you uttered
Coming in human form
For the redemption of humanity
Become the common
Scripture for the entire world
Transcending language,
Religion and ethnicity
Standing in a
Narrow limitation
Reviling others
Bhakti
Leaving such
Group and
Transcending the limitation
And joining in bhakti
Worshiping you
Each day
Is the real
Glory for you
Mathigiri, 26-11-2020, 11.30 p.m.
When I read the poems of Hindu bhakti saints, I feel some kind of affinity with them in their spirit of bhakti. Of course there is lots of theological difference between my bhakti and their bhakti. Even various Hindu saints belonging to different sampradayas do not agree with each other in their theological approach. But the spirit of bhakti unites them all. As a Hindu bhakta of the lord I feel the same kind of affinity with them as every beautiful gift is only from God.
1248 வரையறை கடந்தவன்
எவர்மூலம் எதைநீ
சொல்லியேத் தந்தாலும்
அதன்மூலம் உன்மொழி
நானுமே கேட்கிறேன்
எனக்கான செய்தியை
எதன்மூலம் தந்தாலும்
அதிலுள்ள உன்குரல்
மட்டுமே கேட்கிறேன்
உன்மறை கூறிடும்
உபதேசம் தன்னையும்
எம்மறைக் கூறினும்
எனக்கது ஒன்றுதான்
மறைகளின் வரையறை
தன்னையும் கடந்திட்ட
உனக்கவை எல்லாமே
உன்மொழி மட்டும்தான்
உன்மறை மூலமே
உன்னையும் அறிந்தபின்
உன்னாவி கொண்டுமே
அவைகளைப் பார்க்கிறேன்
உலகினில் உள்ள
நல்லவை அதனைத்தும்
உன்வரம் என்பதை
நானுமே உணர்கிறேன்
மானுடம் உய்ய
மனுவாய் வந்து
நீசொன்ன அனைத்து
வார்த்தைகள் யாவும்
ஓர்இனம் மொழி
மதங்களைக் கடந்து
உயல்கிற்கே பொதுமறை
ஆனதே உண்மை
குறுகிய எல்லைக்குள்
நின்று கொண்டு
பிறரின் பக்தியைத்
தூற்றிக் கொண்டு
வாழும் மனிதரின்
கூட்டத்தை நீங்கி
எல்லைகாள் கடந்த
பக்தியில் இணைத்து
அனுதினம் உன்னைப்
போற்றிப் பணிந்து
வாழ்வதில் மட்டுமே
உள்ளது மேன்மை
மத்திகிரி, 26-11-2020, 11.30 p.m.