1251 Peace
I need this kind of peace
Within me
You should provide the same
Every day to me
Only always thinking you
And joining with you
I should spend
This life on this earth
Lamenting that
What kind of life is this?
And thinking each day life
As a burden
As many people are living
Like this in this world
I should think
What you have done to me
Giving some rest
To the activities of my mind
You gave strength
To the activities of my body
Give me your grace
To worship every day
Only thinking you alone
In my heart
I knew you
Through your grace
I received you
Because of your act
I understood you
By giving me to you
I will live like this
Every day in you
I am not anxious
Thinking about the future
I never regret
Which went in the past?
As your grace
Remains new each day
I never seek any other thing
Other than that
There is a name
For that grace
There is a means
To know that
By giving one thing
Which the world cannot give
You kept me
In your peace
Mathigiri, 31-1-2021, 10.30.
I don’t to call it as a break, I realized that at least God needs some break from me as I am pestering Him too much by writing poems. For the time being I have decided not to write any more poems, unless there is inner compulsion. Though I am still very active both physically and mentally, I have decided to give some kind of rest to both of them. So this night as I sat silently thinking about the Lord, this thought of His peace filling both my mind and spirit. As inspiration came I wrote this song.
1251 அமைதி
இதுபோன்ற அமைதி
எனக்குள்ளே வேண்டும்
அதையே அனுதினம்
நீதர வேண்டும்
உன்னையே நினைந்து
உன்னுடன் இணைந்து
உலகின் வாழ்வை
கடந்திட வேண்டும்
என்னடா வாழ்விது
என்றுமே நொந்து
அனுதின வாழ்வை
பாரமாய் நினைந்து
வாழ்ந்திடும் பலரும்
உலகினில் இருக்க
எனக்குநீ செய்ததை
நினைந்திட வேண்டும்
சிந்தையின் செயலுக்கு
ஓய்வுமேத் தந்து
தேகத்தின் செயலுக்கு
பெலமுமே தந்தாய்
உள்ளத்தில் உன்னை
மட்டுமே நினந்து
உன்னை வழிபட
அருளுமேத் தருவாய்
உனது அருளால்
உன்னை அறிந்தேன்
உனது செயலால்
உன்னை அடைந்தேன்
என்னையேத் தந்து
உன்னை உணர்ந்தேன்
இதுபோல் உன்னுள்
அனுதினம் வாழ்வேன்
வருவதை நினைந்து
கவலையும் இல்லை
சென்றதை நினைத்து
வருத்தமும் இல்லை
அனுதினம் உனதருள்
புதிதாய் இருக்க
அதையன்றி வேறொன்றை
நாடவும் இல்லை
அந்த அருளுக்கு
பெயருமே உண்டு
அதையும் அடைந்திட
வழியொன்று உண்டு
உலகம் தராத
ஒன்றையேத் தந்து
வைத்தாய் என்னை நீ
உன்னமைதியில் இன்று
மத்திகிரி, 31-1-2021, இரவு, 1030.